பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சுழல் 23.

கிடந்தான் கண்ணப்பன். கடைசி நாள் ஊர்வலத்துக்குப் பல்லக்கு ஜோடிக்கக் கும்பகோணத்திலிருந்து வண்டி நிறையப் பூவும் முத்தும் மணியுமாக வந்து இறங்கின. ஒதுவார்களும், பல்லக்கு அலங்கரிக்கும் கலைஞர்களும் காலையிலிருந்து இரவு வரையில் தங்கள் கைவண்ணம் முழு வதையும் காட்டி அழகான பல்லக்கை ஜோடித்தார்கள்.

ஊர்வலத்துக்குப் பிரபல நாதசுர வித்துவான் ராஜரத்தினம் பிள்ளையின் மேளக் கச்சேரி ஏற்பாடாகி யிருந்தது. மைனருக்கும் ராஜரத்தினம் பிள்ளைக்கும் எத்தனை ஈடுபாடு, எவ்வளவு அந்நியோந் நியம் என்பதை நேரில் கண்ட அத்தனை வித்துவான்களும் ஊர்க்காரர் களும் வியந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மாலை நாலு மணிக்கு மைனர் அனுப்பிய காரில் வந்து இறங்கிய ராஜரத்தினம் பிள்ளையை, மைனர் அங்கே. இங்கே அசைய விடாமல் தம்முடனேயே இருத்தி வைத்துக் கொண்டார். தவுல் வித்துவான்களும், வாத்தியங்களும் இறங்கியிருந்த ஜாகைக்குக் குடம் குடமாகப் பசும்பால் காப்பியும், தட்டுத் தட்டாக நெய்யொழுகும் தித்திப்பும் காரமும் சென்றன. அங்கே மைனரும் சென்று அடிக்கடி கவனித்துக் கொண்டார்.

உடன் இருந்த பிள்ளை, ‘கல்யாண மாப்பிள்ளையாய் லட்சணமாய் நீர் பந்தலில் போய் உட்காருமையா; எங்களையெல்லாம் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்” என்று மைனரைக் கடிந்து கொண்டார்.

அன்றிரவு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஊர்வலம் புறப்பட்டது. பெரியசாமி ஊர்வலத்தில் தன் நிர்வாகத் திறமையை எல்லாம் உபயோகித்து மிகவும் பிரமாதமாக ஆட்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தான் ஆறடிக்கு ஒரு விளக்கு வீதம் இருமருங்கிலும் நிறையக் கியாஸ் விளக்குகள் சரம் கோத்தாற்போல் நின்று ஒளிவெள்ளத்தில் அந்தக் கிராமத்தையே மிதக்கச் செய்தன. ---