பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 புல்லின் இதழ்கள்

கடைத்தெரு வாசனைக் கதம்பமும், திண்டு’ம் பஞ்சமில் லாமல் வாங்கி வருவான். அன்றே அதைத் திருவிடை

மருதுரருக்கும் கொண்டுபோய்க் கொடுப்பான்.

சுந்தரியும் வசந்தியும் இவற்றைப் பார்த்து மகிழ்ந்து போவார்கள். ஹரியின் அன்பையும் குணத்தையும் எண்ணி வியந்தபடி, பெண் அதிர்ஷ்டக்காரிதான்’ என்று சுந்தரி மனத்துக்குள் எண்ணிக்கொள்வாள். ஆனால் சுசீலா மட்டும் அவன் ஆசையோடு வாங்கி வரும் எதையுமே விரலாலும் தீண்டமாட்டாள். ஹரி அதைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை. மறுமுறையும் அவன் சுசீலா வக்காக ஏதாவது வாங்கி வருவது தப்பாது.

ஹரி வரும்போதெல்லாம் காந்தாமணி கேலி பண்ணத் தவறவே மாட்டாள். அவன் ஊருக்குப் போகும்போது ஒவ்வொரு தடவையும் ஏதாவது சாமான்களை வாங்கி நிரப்பிக்கொண்டு செல்வது காந்தாமணிக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அநேகமாக டிரைவர் மூலந்தான் தெரிந் திருக்கவேண்டும் என்று ஹரி நம்பினான். ஏனெனில் கடைத் தெருவைச் சுற்றிக்கொண்டு அவன் ஊர்வலம் செல்வதைச் சுசீலாவைப் போல் பின்னால் வந்து நோட்டம் பார்க்கிற சுபாவம் காந்தாமணிககு இல்லை. அவளு டைய பெரும்போக்கு யாருக்குமே வராது.

தான் கொடுத்தனுப்புகிற பணம் பாதிக்குமேல் இப்படி வழியிலேயே பூவும் காயுமாய் உதிர்ந்துவிடுகிறது என்று அறிந்து கொண்டவுடன், அந்தச் செலவை அவளே ஒவ்வொரு தடவையும் வலுவில் வந்து ஏற்றுக்கொண்டு வாங்கி அனுப்புவாள், ஹரி எத்தனை மறுத்தாலும் அவளிடம் பலிக்காது. ஆனால் மறுமுறை வந்ததும் ஹரியைக் கேலி செய்யவும் அவள் தவறமாட்டாள்.

இப்படித் தஞ்சாவூரையே ரெயிலில் ஏற்றிக் கொண்டு போவதற்குப் பதில் உங்கள் குருநாதர் குடும்