பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 புல்லின் இதழ்கள்

“ஏன்? டாக்டர் கடிதங்கூட என்னை எழுதக்கூடாதுஎன்று சொன்னாரா?’

காந்தாமணி சிரித்துக்கொண்டே கேட்டாள்: ‘ஏன்? “வாத்தியாருக்கு உடம்பு சரியில்லை, இரண்டு நாள் கழித் துத்தான் வருவார்’ என்று நான் எழுதக்கூடாதா? ஒரு வேளை எனக்குத் தெரியாத ரகசியம் ஏதாவது எழுதப் போகிறீர்களா?’

உன்னைப் புத்திசாலி என்று எண்ணிக் கொண்டிருக் கிறேன். இம்மாதிரி அசட்டுக் கேள்விகளை நீ கேட்கக் கூடாது.” =

“அப்படி நான், என்ன கேட்டுவிட்டேனாம்?”

இன்னும் என்ன கேட்க வேண்டும்? கல்ராணராமனை எங்கள் வீட்டில் எல்லாரும் ஆண்பிள்ளை என்று தான் எண்ணியிருக்கிறார்கள். இப்போது சொல், நீ யார்? கல்யாணராமனா, காந்தாமணியா?”

காந்தாமணி அவன் கண்களையே பார்த்துக்கொண் டிருந்துவிட்டு, அடித் தொண்டையில் மெல்லக்கேட்டாள்; “நான் யார் என்று சொல்ல வேண்டுமா? சொல்லவா. சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா? கோபிக்க மாட் டீர்களே?’

ஹரி செயலிழந்தவன்போல், மிக அருகிலிருக்கும் அவன் முகத்தையே பார்த்தான்.

“ஏன் பதில் பேச மாட்டேன் என்கிறீர்கள்?”

காந்தாமணி அவன் தோள்களைப் பிடித்து உலுக்கிக்

கேட்டாள்.

“நான் எதற்காகப் பேச வேண்டும்? நீதானே, ஏதோ சொல்கிறேன் என்றாய். கேட்க வேண்டியவன் ஊமையாகத்தானே இருக்க வேண்டும்?’

“ஊமையாக மட்டும் இருந்தால் போதாது. இனிமேல் நீங்கள் குருடாகவும் இருக்க வேண்டும். என் பெயர்