பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 புல்லின் இதழ்கள்

ஆனால், ஹரி செய்கிற காரியத்தில் தலையிடுவதை பாகவதரும், லட்சுமியம்மாளும் குறைத்துக் கொண்டு, அவனுக்குத் தெரியாதா? இன்னும் அவன் என்ன பச்சைக் குழந்தையா?’ என்று ஒதுங்கியே நடந்துகொண் டார்கள்.

பாகவதர் படுக்கையில் விழுந்ததிலிருந்து பெருகிய குடும்பச் செலவுக்கு எல்லா வருவாயும்தான் தேவைப் பட்டது. போன நாள், போகாத நாள் என்று, கணக்குப் பார்க்காமல், மாதம்மாதம், நானுாறோ, ஐநூறோ தஞ்சாவூர் மிராசுதார் கொடுத்ததாக ஹரி கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருக்கிறான். இந்த நிலையில் அறவே டியூஷனுக்கும் போகாமல் இருந்தால் எப்படி?

“ஊரி படுகிற சிரமத்தைப் பார்த்து, திருவிடைமரு துாருக்காவது போவதைக் கொஞ்ச நாள் நிறுத்திக்கொள்ளச் சொல்லலாம் என்றாலோ, அது பெரிய விபரீதமாகிவிடும், சுந்தரிக்குப் புரிந்தாலும், வசந்தி சிறிசு; இரண்டுங்கெட் டான். ஏதாவது தவறாக எடுத்துக் கொள்வாள். எல்லா வற்றுக்கும் மேல்; நாளைக்கு அவனையே கட்டிக் கொள் வளப் போகிறவள்’ என்று பலவாறு எண்ணிப் பார்த்த பிறகு, லட்சுமியம்மாள் ஏதும் கூறாமல் இருந்துவிட்டாள். அவன், முதல் நாள் திருவிடைமருதுாருக்குப் போனபோது கசீலா தடுத்துப் பார்த்தாள். ஹரி அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், அம்மாவிடம் சொல்லிக்கொண்டு

புறப்பட்டுச் சென்றுவிட்டான்.

Fi வர வரத் தன்னை, ஹரி லட்சியம் செய்வதில்லை என்று சுசீலாவின் உள்ளத்தில், லேசாக உறுத்திக் கொண்டே இருந்தது. பணம் காசை உத்தேசித்துத் தஞ்சாவூருக்குப் போவதாவது அவசியம் என்று அவள் ஒப்புக்கொள்ளத் தயாராக இருந்தாள். ஆனால், திரு விடைமருதுரருக்குப் போய் இப்போது வசந்திக்குக் கிளாஸ்