பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய விலாசம் 325

  • ஏன் மாமா பேசவில்லை?”

4 : I. I. H. H. H. H. H. H. H. H. H. H. H. H.

உன்னாலே பேச முடியாது மாமா. உனக்குத் தான் இப்போ வெல்லாம் வெட்கம், மானம் எல்லாம் புரிய ஆரம்பித்து விட்டதே!’

கோபிச்சுக்காதே தம்பி. இனிமே இந்தப்பாவாடைப் பயல் வீட்டுக்குள்ளாற நுழைஞ்சான்னா, காலை முறிச்சுப் புடறேன். வெளையாட்டில்லே, சத்தியமாகச் சொல்ல றேன் தம்பி!’

ஏன் LD TLD IT- சத்தியம் பண்ணினவுடனே, ‘விட்டேன் விட்டேன்னு’ அலறுவாயே. இப்போது பண்ணின சத்தியத்தை மாத்திரம், கெட்டியாய்ப் பிடிச் சுக்கப் போறியா?”

பக்கிரி குனிந்தபடியே சிரித்துக் கொண்டான். ஹரி பையிலிருந்து நாலைந்து வெள்ளரிப் பிஞ்சுகளை எடுத்து அவன் கையில் கொடுத்தான். பக்கிரி அதை அம்மன் கோயில் பிரசாதத்தைப் போல் பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான்.

பணம் இருக்கிறதா, தீர்ந்து விட்டதா?’’

இன்னுமா தம்பி அது இருக்கும்? உன்னைப் பார்த்தே ஒரு மாசத்துக்கு மேலே ஆவுதே. அதுக்கும் முந்தித்தான் நூறு ரூவா கொடுத்தே?’ “

ஏன் மாமா, நான் கணக்கா கேட்டேன்?’

  • அதுக்கு இல்லே தம்பி, நீயும் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறே; நல்ல எண்ணத்தோட கொடுக்கிறே. அத்தெ, நாங்க ஆழும் பாழும் ஆக்கலேன்னு சொல்ல றேன்.’

மாமாவோடு பேச்செல்லாம் பிரமாதமாகத்தான்

இருக்கு. ஸென்ட் பூசுவதெல்லாம் இன்னும் இருக்கிறதா: இல்லே... விட்டாச்சா?’’