பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புல்லின் இதழ்கள்

நீரில் விழுந்த உப்பைப் போல, காலம் ஒளிவெள்ளத்தில் கரைந்தது. ஆனால் அத்தனை நேரம் ஒழுங்காக எரிந்த விளக்குகள் கண்ணப்பன் போனதும், மக்கர் செய்தன. ஒரு விளக்கு “பக்-பக்” என்றது. கூடத்து மூலையில் இருந்த விளக்கும் பற்றி எரிந்தது . சில அணைந்தே

பாயின.

அவ்வளவுதான், சிறிது நேரத்துக் கெல்லாம் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு, எல்லாரும் ஏககாலத்தில் “லைட் பாய், * - லைட்பாய்1 என்று கத்தினர். கண்ணப்பன் அங்கே இருந்தால்தானே? சம்பந்தி வீடு இருளில் தவித்தது. இதற்குள் இந்த விஷயம் மிகப் பெரிய குற்றமாக உருவெடுத்துப் பெண் வீட்டுக்காரர் காதுக்கு எட்டியது. *இதுவரை குற்றங்குறை கூற இடம் இல்லாகுல் கவனித்தும், இறுதியில் சம்பந்தி வீட்டாரிடமிருந்தி இப்படி அவசிய இல்லாத புகாரைக் கேட்க வேண்டியதாகிவிட்டதே’ என்று பெண் விட்டாருக்கு மிகவும் வருத்தம் எம்பிட்-து.

ஊர்வலம் முடிந்து வந்த பெரியசாமியைப் பெண்ணின் தகப்பனார் பிரமாதமாகக் கோபித்துக் கொண்டார். * விளக்குக்காக ஒரு தம்பிடிகூடத் தர முடியாது. உன் முதலாளியை வரச் சொல்லு என்று கூறிவிட்டார். எல்லாவற்றையும் புரிந்து கொண்ட பெரியசாமி அப்படியே வெலவெலத்துப் போனான்.

- என் மகனை நம்பி மோசம் போயிட்டேனுங்க. அவன் இப்படிப் பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லை எசமான். தப்பெல்லாம் என் மேலேதான். இந்த ஏழையை இந்த ஒருவாட்டி மன்னிச்சுப்புடுங்க எசமான்’ என்று நெடுஞ்சாண்கிடையாகப் பெண் ஆரீட்டுக்காரர் காலில் விழுந்து புலம்பினான் பெரியசாமி, அவர்கள் கோபம் தணியவில்லை. தரதரவென்று மதனையும் இழுத்துக் கொண்டு வந்து எஜமானின் கால்களில் விழச் செய்தான். இதற்குள் அங்கு வந்த மைனர் எல்லா விஷயங்களையும்

விசாரித்துத் தெரிந்துகொண்டார்.