பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வனவல்லவே! 351

எதுவும் புரியாமல் ஹரி விழித்துக் கொண்டிருந்தான்.

சற்றுக் கழித்து அவன் கேட்டான்: சுசீலாவிடம் நான் யார் என்று விளக்கிக் கூறினர்களா? நான் அநாதை என்பது அவளுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே தெரியும். ஆனால், விதி வசத்தால் அநாதைகள் ஆன உயர்ந்த அரச குமாரர்களும் உண்டு. அதில் நான் எந்த ரகத்தைச் சேர்ந்தவன் என்பதைக் கூறிவிட்டீர்களா?’

கவலைப்படாதே. சுசீலா, அவ்வளவு அதிகமாக நீ ஒன்றும் அரசகுமாரனாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படவில்லை. உன்னைப் பற்றிய எல்லாமே இப் போது அவளுக்குத் தெரியும். ஆனால், அப்பாவுக்கும், அம்மாவுக்கும், இதை எப்போது சொல்ல வேண்டுமோ அப்போது நான் பார்த்துச் சொல்லிக் கொள்கிறேன். அது வரையில் இதைப் பற்றி யாரிடமும் நீ மூச்சு விட வேண்டாம்’ என்று காயத்திரி கூறிச் சென்று விட்டாள். அவள் சென்ற திக்கையே வெறிக்கப் பார்த்து நின்ற அவன் நீண்ட பெருமூச்சு விட்டான்.

வாரி வழங்குவதைத் தவிரக் காயத்திரி அவனிடம் எதையும் யாசித்தவளல்ல; அவனும் ஈந்தவனல்ல. ஆனால் இன்று தங்கைக்காக கை ஏந்தி வந்தவளிடம், ஹரி தன் விருப்பு வெறுப்பற்ற வாழ்வையே தூக்கிப் போட்டு விட்டான். அவளுக்காக அவன் இதைச் செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்.

மறுநாள் பங்களுர்க் கச்சேரிக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளை ஹரி செய்து கொண்டிருந்தான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு புதிதாகப் போட்ட * சாரணி தந்தி கூடிக் குறைந்து கொண்டிருந்தது. அதைக் கூட்டிக் குறைத்துத் தந்தியைச் சரி பண்ணி வைத்துக் கொண்டான். அடிக்கடி கக்கிக் கொண்டிருந்த பிருடை'