பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவல்லவே! 357

வந்தாள். மாதம் பிறந்தவுடன் முதல் தேதியன்று செலவுக்கென்று பணம் கொண்டு வந்து கொடுத்து விடுவாள்.

வழக்கம்போல் அந்த மாதமும் சுந்தரி வந்தாள். பணத்தை இரண்டாம் பேருக்குத் தெரியாமல் லட்சுமி யின் கையில் கொடுத்துவிட்டுப் பாகவதரைப் பார்த்து விட்டுப் புறப்பட்டுப் போனாள். இதைப்பற்றி லட்சுமி யம்மாளுக்கு ஒன்றுமே தெரியாது. அவள் பேசாமல் வாங்கி வைத்துக்கொண்டாள்.

ஆனால், பாகவதருக்குச் சுந்தரியின் பணத்தை இனி யும் ஏற்றுக்கொள்வது தர்ம விரோதமாகவும், நம்பிக்கைத் துரோகம் போன்ற பாவமாகவும் தோன்றியது.

-ஹரி என் சிஷ்யன்: எல்லாவற்றுக்கும் மேலாக நான் வளர்த்த பையன் என்னுடையவன். நாளை வசந்தியை மணந்து கொள்ளுவதன் மூலம், இரு குடும்பத்தின் உறவும் மேலும் ஒன்றாகி பலப்படப் போகிறது. பாங்கிலுள்ள ஹரியின் பணங்கூட நாளை வசந்திக்குத் தானே சேரப் போகிறது? அதனால் சுந்தரியின் உதவிகளை எத்தனை ஏற்றுக் கொண்டாலும் தவறில்லை’ என்று அவர் அதுவரை எண்ணி வந்தார். ஆனால் அந்தச் சமாதானம் எல்லாம்

இன்று எங்கே?

சுசீலாவும் ஹரியும் அன்று சண்டை போட்டுக் கொண்டது போலவே, இன்று அவருடைய கண் எதிரி லேயே சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக இருந்தனர். ஒரு வரை ஒருவர் மணந்து கொள்ளப் போகிறவர்கள் என்கிற முடிவில் அவர்களுடைய நடைமுறை இருந்தது. கொஞ்ச நாளைக்குப் பிறகு, லட்சுமியம்மாளுக்கும் இந்த விஷயம் தெரிந்தவுடன், அவள் அப்படியே துடித்துப் போனாள். வசந்திக்கு ஏற்படப் போகும் ஏமாற்றத்தை எண்ணி, சுந்தரி கூட அப்படிக் கவலைப்பட்டு உருகமாட்டாள்: லட்சுமியம்மாள் அப்படித் தவித்துப் போனாள்.