பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கணையாழி

சுசீலாவின் இந்த முடிவிற்குப் பிறக வசந்தியையோ, சுந்தரியையோ காணும்போதெல்லாம் ஹரிக்கு என்னவோ போலிருந்தது. மிகப்பெரிய குற்றத்தைச் செய்வதுபோல் அவன் உள்ளுணர்வு வருத்தியது.

திருமணம் எப்பொழுது வேண்டுமானாலும் நடத்து விட்டுப் போகட்டும்; “வசந்தியை மணந்து கொள்ள அவனுக்குச் சம்மதமா இல்லையா?” என்கிற ஹரியின் கருத்தைக் கூட அவர்களால் அறிய இயலவில்லை.

எதற்காகத் தன் தந்தை இது விஷயமாக ஹரியைக் கேட்டு ஒரு முடிவுக்கு வரமாட்டேன் என்கிறார் என்பது வசந்திக்குப் புரியாவிட்டாலும் அந்தக் கோபத்தினால் அவள் சுவாமி மலைக்குப் போய் வருவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டாள்.

அப்பாவைப் பார்த்துவர அம்மா போவதே போதும் என்று இருந்தாலும், எப்போதாவது பெரியம்மாவைப் பார்க்க வேண்டுமென்று வசந்தியின் உள்ளத்தில் அடங்காத ஆசை வந்துவிடும். பெற்ற தாயைவிடப் பெரியம்மாவின் அன்புதான் வசந்திக்குப் பெரிதாகத் தோன்றும். சிறு வயதிலிருந்தே அப்படித்தான். வீட்டுக்குக் காவலாகக் காயத்திரியை வைத்துவிட்டு, சுசீலாவுடன் லட்சுமி திருவிடைமருதுாருக்கு வாரத்தில் ஒரு நாள் வந்து போவாள். வரும்போதெல்லாம் வசந்திக்கு ஏதாவது தின்பண்டம் கொண்டு வருவாள். அரைநாள் இருந்துவிட்டு லட்சுமி ஊருக்குப் புறப்பட்டால், உடனே வசந்தி பெரியம்

பு. இ.-23