பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலவு காத்த கிளி 371

மனம் கோணாது; அவரது குடும்பத்தினரின் குண நலன் களையே தனதாகக் கருதி, ஒரு பரிபூர்ண அடிமையைப் போல இத்தனை காலம் பாகவதரின் இளைய மனைவி என்கிற ஸ்தானத்தை ஈடேற்றி விட்டாள்.

ஆனால் - வசந்தி பிறத்தபிறகு, தன்னுடைய ஆசை களையெல்லாம் மகள் மீது கொட்டி வளர்த்து-அவளது

எதிர்காலம் பற்றி எண்ணற்ற இன்பக் கனவுகள் கண் ெ வந்தாள். அவளது கனவுகள், அவள் விரும்பிய வண்ணமே நிறைவேறப் போவதாக; ஹரி- வசந்தி திருமணத்தைப் பற்றி எண்ணி மனம் பூரித்தாள். செய்யும் தொழிலிலும் குணத்திலும் ஹரியைப் போன்ற ஓர் உயர்ந்த பையன் வசந்திக்குப் புருஷனாகவும், தனக்கு மருமகனாவும் வரப் போவதை, ஒரு பூர்வஜென்ம புண்ணியமாகவும், இதை விடத் தனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியது பிரிதொன்று மில்லை என்றும், எண்ணி எண்ணி அவள் மனம் பூரித் திருந்தாள். ஆனால் இப்போது- அவளது மிகப்பெரிய அந்த மகிழ்ச்சியிலும் பேரிடியைத் துாக்கிப் போட்டவர் பாகவதரே தான். இப்படி இடிமேல் இடிவிழுந்து, அவள் இடிதாங்கிக் கருவியர்கவே ஆகிவிட்டாள்.

ஹரியையும் வசந்தியையும் பற்றி ஆண்டாண்டு காலமாய்க் கண்டு வந்த கனவுகளும், இன்பக் கோட்டை களும் அஸ்திவாரமற்றவை போல் இடிந்து தலைமேல் விழுந்து கொண்டிருந்தன. -

மகளின் திருமணமே தன் வாழ்க்கையில் மிகப்பெரிய இன்பம் என்று எண்ணியிருந்த சுந்தரிக்கு; இன்று அதை விடப் பெரிய துன்பம் இல்லை என்பதுபோல்; அது அவள் நெஞ்சைப் பிய்த்தெறிந்துவிட்டது.

‘அம்மா!’ என்ற குரலைக் கேட்டுக் சுந்தரி தலை நிமிரவே இல்லை. மீண்டும் வசந்தி தாயை அழைத்தாள்.