பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 தந்தி வந்தது

கன்டோன்மென்ட் ஸ்டேஷனுக்குள் பங்களுர் மெயில் நுழையும்போது மணி ஆறரை இருக்கும். வரவேற்க ஸ்டேஷனில் தயாராக சபா உற்சவக் கமிட்டிக் காரிய தரிசியும் தலைவரும் வந்திருந்தனர்.

காரியதரிசி, ஹரிக்கு வணக்கம் தெரிவித்தபடியே, பக்கத்திலிருந்த தலைவர் ரகூத்தம ராவை அறிமுகம் செய்துவைத்தார். ஹரியும் அவருக்குப் பதில் வணக்கம் தெரிவித்தபடியே வண்டியிலிருந்து இறங்கினான்.

காரியதரிசி, ஹரியின் பெட்டி படுக்கைகளை வெளியி லிருந்த தம் காரில் ஏற்ற ஏற்பாடு செய்தார். ராஜப்பா வும் பஞ்சு அண்ணாவும், முதல் நாளே வந்துவிட்டனர். அவர்கள் எல்லாரும்; கச்சேரி ஜாகையிலேயே தங்கியிருந் தனர். ஹரியை காரியதரிசி தம்முடைய வீட்டுக்கே அழைத்துச் சென்றார். * --

மத்தியான்னச் சாப்பாட்டுக்குப் பிறகு சிறிது நேரம் படுக்கலாமென்று ஹரி படுக்கையை விரித்தான். அதிலி ருந்து கடிதம் ஒன்று துள்ளி விழுந்தது. ஆச்சரியத்துடன் பிரித்தான். சுசீலா எழுதியிருந்தாள்:

‘உங்களைப் பிரிந்து எப்படி இந்த நான்கு நாள் இருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. மனத்துக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது-சுசீலா...’

கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்தான். வார்த் தைகள் அவன் வசமாகிவிட்டன. அவள் நினைவு அவனைப் புரட்டி எடுத்தது.