பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 புல்லின் இதழ்கள்

டாக்டர் சேகர் பாகவதரைச் செளகரியமான ஒரு கட்டிலில் படுக்க வைத்து முதலில் அவருடைய நாடியைப் பரிசோதித்துவிட்டுத் திருப்தி தெரிவித்தார். பிறகு சந்திரா, அங்கிருந்த லட்சுமி யம்மாள், சுசீலா, காயத்திரி எல்லாரையும் மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

சேகர் ஹரியிடம், முதலில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, காபி பலகாரம் சாப்பிட்ட பின் சாவகாசமாகப் பேசலாம். இரவெல்லாம் மிகுந்த சிரமப் பட்டுப் பிரயாணம் செய்திருப்பீர்கள்’ என்று கூறினார்

“அதெல்லாம் ஒரு சிரமும் இல்லை. உங்களுக்குத் தான் எங்களால் சிரமம்’ என்று சிரித்துக் கொண்டே கூறிய ஹரி, கையிலிருந்த கடிதத்தைக் கொடுத்தான்,

அதைப் பெற்றுக் கொண்ட சேகர், கடிதம் இருக் கட்டும்; எனக்கு எல்லா விவரமும் அண்ணா பங்களுரி லிருந்து டிரங்கால் பண்ணி விட்டிாா’ என்று கூறிவிட்டு, பக்கத்திலிருந்த தமது நர்ஸிங் ஹோமுக்கு அள் அனுப்பிப் பாகவதருக்கு, பெட்’ ஏற்பாடு செய்தார். ---

பெண்கள் பகுதி மிகவும் கலகலப்பாகவே இருந்தது. சில மணி நேரத்துக்குள்ளாகவே சந்திராவை லட்சுமி

யம்மாள், சுசீலா, காயத்திரி-எல்லாருக்கும் மிகவும் பிடித்து விட்டது.

உள்ளே வந்த சேகர், சந்திராவை ஹரிக்கு அறிமுகம் செய்து வைத்து, இவளுக்கு சங்கீதம் என்றால் உயிர். ஒரு கச்சேரி விடமாட்டாள். அதுவும் என் அண்ணாவைப் போலவே, உங்கள் குருவின் பாட்டில் இவளுக்கு அசாத்தியப் பிரமை’ என்றார்.

உடனே ஹரி, இவர்களுக்குப் பாடத் தெரியுமா?” என்று கேட்டான்.