பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 புல்லின் இதழ்கள்

அறை, ஆபரேஷன் தியேட்டர், நோயாளிகளுக்காகப் படுக்கைகள், மாடியிலும் அதே போன்ற வசதியான விசேஷ அறைகள், மருந்துச் சாலை, ஸ்டோர் ரூம், குடி யிருப்புகள் எல்லாம் அழகாகவும் சுத்தமாகவும் இருந்தன. நர்ஸ்-கள் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் குறுக்கும் நெடுக்கும் நடமாடிக் கொண்டிருந்தனர். சுவரெல்லாம் முகம் தெரியும் கண்ணாடி போல் இருந்தன. வெளியில், நோயளிக்காக வந்து தங்கும் உதவியாளர்களுக்கான குடி யிருப்புகள்: வழியெல்லாம் குரோட்டன்ஸாம், விசிறி வாழைகளும் அழகாகத் தலையசைத்துக் கொண்டிருந்தன. மிகவும் விஸ்தாரமாகக் கட்டியிருந்த அந்த அழகிய நர் ஸிங் ஹோமை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே வந்த வர்கள் அதன் வாயிலை அடைந்தனர். அங்கே

என்ன பார்க்கிறீர்கள்? எல்லாம் உங்களுடைய இடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள். என் மாமியாருக் கும் உங்கள் பெயர்தான். அம்மா நினைவாக அவர் ‘லட்சுமி நர்ஸிங் ஹோம் என்று பெயர் வைத்தார்’ என்று சந்திரா விளக்கினாள்.

மிகச் சீக்கிரத்தில், மிக நெருங்கிப் பழகத் தொடங்கிய சந்திராவை எல்லாருக்கும் பிடித்து விட்டது.

அதோடு, நீங்கள் அசப்பில் பார்ந்தால் என் அத்தை போலவே இருக்கிறீர்கள். இதைத்தான் அவர் என்னிடம் புறப்படும் போது கூறினார்’ என்றாள் சந்திரா.

‘அப்படியானால், இனிமேல் அம்மா பாடு யோகந்: தான்’ என்று சுசீலா சிரித்தாள்.

அவளுடைய துணிச்சலைக் கண்டு ஹரி வியந்தான். லட்சுமியம்மாளுக்கு இதை எல்லாம் கேட்கக் கேட்க மசிழ்ச்சியாகவும், மறுபுறம் பெருமையாகவும் இருந்தது.