பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. பிறவிக் கடன்

இசைப்பவன் இசையை மறந்தாலும், கல்யாணக் காரர் கச்சேரியை மறந்தாலும், பக்கிரி தண்டலுக்கு வர மறக்கவில்லை.

மாயூரத்தில் ஹரி கச்சேரியை முடித்துக் கொண்டு ரிடயரிங் ரூமில் தங்கியிருந்தான். அங்கிருந்து அவனுக்கு

மதுரைக்குப் போயாக வேண்டும்.

ஹரிக்கு அன்று மன நிம்மதியே இல்லை. அத்தனை வருஷங்களில் அன்றுதான் ‘கல்யாணக் கச்சேரியே பண்ணி விட்டதாக எண்ணி வருந்தினான். கல்யாணக் கச்சேரி என்றாலும், அவன் அங்கும் உழைத்துத் தான் பாடுவான். எங்கோ ஒரு மூலையில் ரசிகன் ஒருவன் இருப்பான், அவனுக்காக என்று அநுபவித்துப் பாடத் தவறமாட் டான். ஆனால் அன்று எல்லாரும் ஹரியின் பாட்டைப் புகழ்ந்தாலும் அவனுடைய மனத்துக்குச் சமாதான மில்லை. காரணம், பட்டணத்திலிருந்து புறப்படும்போதே அவனுக்கு ம அமைதி இல்லை.

போனில் காந்தாமணியின் பெயரைக் கேட்டதும் அவன் மிகவும் குழம்பிவிட்டான்.

- காந்தாமணி பட்டணத்திலா இருக்கிறாள்? அவள் டாக்டர் சேகருக்குத் தெரிந்தவளாகவுமா இருக்கவேண் டும்? என்றாவது ஒரு நாள் அவள் அந்த வீட்டில் வந்து நின்றால் என்ன ஆகும்? கடிதத்தைத் படித்துவிட்ட கோபமே இன்னும் சுசீலாவுக்குத் தணியவில்லை. இப்

பு.இ,-25