உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 புல்லின் இதழ்கள்

‘சின்னம்மாவுக்கு வலி எடுத்து விட்டதாம். மருத்துவச்சிக் கூட வந்தாயிற்று. வீட்டிலேயேதான் இருக்கிறாள்.’ -

இது மாசம் இல்லையே! அதற்குள்ளாகவா?’ என்று முனகிக் கொண்டே உள்ளே சென்ற சுந்தரி பெண்ணிடம், நீயும் என்னுடன் வருகிறாயா? பிரசவ மானால் உடனே நான் திரும்பி வர முடியாது’ என்றாள்.

நீ ஒரு வழியாக அங்கேயே இருந்து, குழந்தையை யும் படிக்க வைத்து விட்டு வேண்டுமானாலும் வா! என்னை எதற்காகக் கூப்பிடுகிறாய்?”

‘ வராவிட்டால் போ! அதற்காக எரிந்து விழி வேண்டுமா? உன் கோபத்துக்கெல்லாம் நான்தானா அகப்பட்டேன்? கல்யாணத்துக்குத்தான் போகவில்லை ஊருக்கு வந்த பிறகு கூட சுசீலாவைப் போய்ப் பார்க்காச் விட்டால் அது உனக்கே நன்றாக இருக்கிறதா?'’

நான் நன்றாக இருப்பதற்காகவா இவ்வளவும் நடந்திருக்கிறது? வெண்ணையும் சுண்ணாம்புமாகப் பழகுகிறவர்களிடம் மரியாதை என்ன வேண்டிக்கிடக் கிறது? என்றும் நான் தனி தனிதான்.”

சரி, போதும் உன் வேதாந்தம்: எனக்கு நேரமா கிறது. ஹரி கூட ஊரில் இல்லையாம்’ என்று புறப் பட்ட சுந்தரி, பக்கத்து விட்டுப் பாட்டியை வசந்திக்குத் துணையாக வைத்துவிட்டுப் புறப்பட்டாள்.

சுந்தரி வண்டியிலிருந்து கீழே இறங்கி உள்ளே நுழை வதற்குள் உள்ளேயிருத்து பெரிதாகக் குழந்தையின் அழு குரல் கேட்டது.