பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 புல்லின் இதழ்கள்

இருக்கிறது என்கிற தைரியம்; அதுதான்’ என்று பெரிய மனுஷிபோல் பேசி நிறுத்தினாள்.

பெண்ணினுடைய பேச்சையும் பார்த்து லட்சுமியம்மாளுக்கே வியப்பாக இருந்தது. மாமாவுக்கோ, அடாப் பழியாயினும் தம் கட்சியை எடுத்துப் பேசிய சுசீலாவின் மீது மதிப்பு அதிகமாகியது. காயத்திரி தன் கடமையைச் செய்த நிம்மதியில் உள்ளே சென்றாள். ஹரியோ உள்ளேயோ வெளியிலோ போக முடியாத தர்மசங்கடத்தில் சிறிது நேரம் தவித்தான்.

பிறகு மாமாவே சுசீலாவைப் பார்த்து போனால் போகிறது, கோபித்துக் கொள்ளாதே ! பாவம் சின்னப் பையன் தானே ? எல்லாம் உலக அனுபவம் ஏற்பட்டால் சரியாய் போய்விடும்’ என்று கூறி, அம்பி, இங்கே வாடா'’ என்று ஹரியைக் கூப்பிட்டார்.

அவனுடைய களை பொருந்திய முகமும், அடக்கமான குணமும் அவரைக் கவர்ந்தன. அவனைப் பக்கத்தில் இழுத்து முதுகைத் தட்டி, உன் பேர் தான் ஹரியா ?’’ என்று விசாரித்தார்.

“ஆமாம்” என்று ஹரி தலையை அசைத்தான். அவர் உடனே ஹரி என்றால் ஹரிஹரனா, ஹரிஹர சுப்பிர மணியனா ? என்று கேட்டார்.

ஏன் இன்னும் வெளியிலிருந்து வந்தபடி சட்டையைக் கழற்றாமல் இருக்கிறாய் ? உனக்கு என்ன வயசு ? பூணுால் போட்டாயிற்றா?

இல்லை’

ஏன்? இன்னும் வயசாகலை என்கிற நினைப்போ?’’ என்று சிரித்துக் கொண்டே கேலியாகக் கேட்ட அவர் கவலையுடன் விசாரித்தார்.

ஏன் ? அப்பா அம்மா இருக்கிறார்களா, இல்லையா’’

தோரணையையும்

ங், ங் I F # o