பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் பார்க்க வந்தவர் == 49.

அப்பா சொன்னால் அதுவே வேத வாக்கு. பாட சாலையில் முறைப்படி அத்தியயனம் பண்ணினவன்.

இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்தாள் சுசீலா. எண்ணங்கள் அவளைக் குளவியாகக் கொட்டின. ஊரி லிருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயம் செய்திருக்கும் மாமா எதற்காக வந்திருக்கிறார் என்பதை அவளால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. போதாததற்கு அம்மா வேறு, தெரியுமோ தெரியாதோ என்று, அடிக்கடி ஜாடைமாடை யாகச் சொன்னாள்.

முறைப்படி அத்தியயனம் பண்ணி முடித்து, வைதிகத் தொழிலுக்குப் பூரணத் தகுதியும் பட்டமும் பெற்ற தம் திருக்குமாரனுக்குச் சுசீலாவைக் கேட்கவே அவர் வந்திருக் கிறார். இனி அப்பா வந்ததும் பேச்சு எப்படியெல்லாம் போகுமோ, அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற கவலை அவளைப் பலமாகக் கவ்விக் கொண்டது.

தலையில் கட்டுக் குடுமியும், இடையில் பஞ்சகச்சமும், இளம் தொந்தியுமாகத் திகழும் மாமாவின் பிள்ளை ராமபத்திரனைக் கற்பனை செய்து பார்த்தாள் சுசீலா. அவளது உடலும் உள்ளமும் ஏக காலத்தில் அதை வெறுத்தன. மாமாவின் பிடிவாதத்துக்கு மசிந்து அப்பா எங்கே என்னை ஒரு வார்த்தைக்கூடக் கேட்காமலே தாரை வார்த்துக் கொடுத்து விடுவாரோ?’ என்கிற பயம் ஒருகணம் எழுந்தாலும் மறுகணமே, அப்பா நிச்சயம் என்னைக் கேட்காமல் முடிவு செய்ய மாட்டார்’ என்றஆறுதலும் பிறந்தது.

இப்படி எண்ணங்களினால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த சுசீலாவுக்கு தூக்கம் எப்படி வரும்? விழிப்பு அவளுக்கு வேதனையூட்டியது. புரண்டு புரண்டு படுத்தாள். உறக்கம் நெற்றியில் தேங்கி, இமைகள் கனத்து, விழிகளைப் பாரம் அழுத்தியது. =