பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் பார்க்க வந்தவர் 51

ஸ்நானத்தோடு, ஜப தபங்களெல்லாங்கூடக் காவிரி யிலேயே முடிந்துவிட்டாற் போலிருக்கிறது. உடம்பு முழுவதும் பட்டை பட்டையாகத் திருநீறு துலங்கியது. பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு, இளம் வெயில் வெறும் தலையைத் தாக்கிப் பித்தத்தைக் கிளப்பா வண்ணம் ஈரத் துண்டை நாலாக மடித்து மண்டையில் போட்டு, வலக் கையில் கிண்டி நிறையக் காவிரி நீரோடு, வாயில் ஏதோ மந்திரங்களை உருப்போட்டுக்கொண்டே வருகிறார்.

வேடிக்கைபார்த்த சுசீலா வேகமாக உள்ளே ஒடினாள்: அம்மா தயாராக வைத்திருந்த காபியை நாலே மடக்கில் குடித்துவிட்டு மாடியறைக்குச் சென்றாள். ஆரம்பத்தில் வேடிக்கையும் விளையாட்டுமாகப் பேசியவளுக்கு, இப்போது மாமாவைப் பார்க்கவே பயமாக இருந்தது. அக்கா எதிலும் தலையிடமாட்டாள், அம்மா, அப்பா, மாமா எல்லாரு மாகச் சேர்ந்து அவளை நடுவில் நிறுத்திக் கொண்டு சம்ம தத்தைக் கேட்டால், என்ன பதில் சொல்லுவது ?

கோவில் நந்தவனத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய பூக்களையெல்லாம் குடலையில் பறித்துக் கொண்டு வந்து வைத்திருந்தான் ஹரி. மாமா உடை மாற்றிக்கொண்டதும் காபி கூட குடிக்காமல் பூஜையில் உட்கார்ந்தார். காயத்திரி குடலையில் இருந்த பவழமல்லிகையை நூலில் கோத்து, அழகாக இரண்டு மாலைகள் கட்டியிருந்தாள். சங்கு புஷ்பத் தையும், காசித்தும்பையும் உதிரியாகவே அர்ச்சனைக்காக வைத்திருந்தாள்.

சுலோ மாடியிலிருந்து கவனித்துக் கொண்டே இருந் தாள். ஹரி வேகமாக சந்தனம் அரைத்துக் கொண்டிருந் தான். அப்பொழுதுதான் குளித்து விட்டு வந்திருந்த அவன் தலையில், ஈரம் நன்றாகக்கூடப் போகவில்லை. அடர்ந்த சுருட்டையான கிராப்புத் தலை அப்படியும் இப்படியும் அழகாக நெற்றியில் புரண்டு, முத்து முத்தான நீரைத்