பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளத்து உறவே உறவென்று புதுமைப் பெண்ணாய்ப் பூத்துக் குலுங்கிய உன் திருமணப் புரட்சிக்கும்

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் - என்று ரைத்த வள்ளலாரின் உள்ளத்து வழித் தோன்றலென. வாயில்லாப் பிராணிகளிடமும் கருணை முகம் காட்டி - அன்பு கூட்டி: மக்களுக்கு மட்டுமல்ல சங்கமும் சமதர்மமும் - இங்கு மாக்களுக்கும் அவை உண்டென நலம் பேணிக் குழு அமைத்த உன் தலைமைக்கும்

ஆலிலை மேல் துயில் கொள்ள ஒருநாள் வருவான் கண்ணன் எனக் கனவு கண்டோ

-- என்னமோ.-- ஆலமரங்களையே கொண்ட - அடையாறைத் தேர்ந்தெடுத்து - அங்கே குழலும், யாழும், இன்னிசை முழங்ககந்தர் வர்களோ-அரம்பையரோ வென ஆடவரும் அணங்குகளும் இனிய நடனங்கள் பல புரிந்து சகுந்தலையும்-துவி:யந்தனு மாய் உன் முன்னிலையில் கந்தர்வ மணம் புரியவும்வில்லொடித்து வீரராகவன், ஜனகமகள் சீதையைத் தெய்வத் திருமணம்

புரியவும்ஆலமா மர நிழலில் அழகிய அரங்குகள் பல அடுக்கடுக்காய்ச் சமைத்துவடமொழி, தென்மொழிகளில் அரிய பல நாட்டிய நாடகங்களை அற்புதமாய்ப் படைத்துப் பார்புகழ் கொண்ட உன் கலை உன்னத்திற்கும்