பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கள் ஒரே ஜாதி 57

‘அது உங்கள் இஷ்டம்: நான் சொல்லத் தயாராக இல்லை. அதற்காக என்னை, என் வீட்டிலுள்ள பழக் கத்தை, நான் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், நீ இப்பொழுது பேசியது போல்-இவன் யாரோ எவனோ அல்ல; இவன் தான் என் வித்தைக்கு - நான் அப்யசிக்கிற, நான் கற்றுக்கொடுக்கிற சங்கீதத்துக்கு வாரிசு. எல்லாச் சிஷ்யர்களையும் போல இவனாக என்னைத் தேடி வரவில்லை; புதையலைப் போல நான் தான் இவனைத் தேடிக் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன். இந்த வீட்டில் எனக்கு என்ன மதிப்பும் செல்வாக்கும் உண்டோ அது அவனுக்கும் உண்டு. அவனை அலட்சியப் படுத்துகிறவர்கள், என்னையும் என் வித்தையையும் அலட்சியப்படுத்துவதைப் போலத்தான்’ என்று பாகவதர் கூறிக்கொண்டு வரும்போதே, நாணா மாமா கோபமாக இடைமறித்துப் பேசினார்.

போரும்டா உன் பேச்சும் லட்சணமும். அது தான் முன்னமே ஒரு தடவை சொல்லிட்டியே; இது சங்கீதக் காரன் வீடு; இங்கே ஜாதி இல்லை, மதமில்லைன்னு. திரும்பத் திரும்ப வேறே சொல்லணுமா? சங்கீதக் காரன்னாலே என்னமோ சொல்லுவா! அதுவும் உச்சஸ் தானத்துக்கு வந்துட்டான்னா, அவனைக் கையாலேயே பிடிக்க முடியாது. இதெல்லாம் நீயாகப் பேசற பேச்சில்லை; இந்த வித்தைக்குள்ள கர்வம்: சாபக்கேடு. ஆரம்பத்திலேயே இப்ப இருக்கிற புத்தி எனக்கு இல்லை. இருந்திருந்தா ஒரு

கரண்டி ஆபீஸ்காரன் கையிலே என் தங்கையைக் கொடுத்திருப்பேன்."”

அண்ணா, நீ சும்மா இருக்கப் போகிறாயா

இல்லையா? நான் ஆரம்பத்திலேயே படித்துப் படித்துச் சொன்னேன். உன் பிடிவாதத்தினாலேதான் இவ்வளவு அமர்க்களமும் ஏற்பட்டது. இந்த வீட்டுப் பழக்கம் பு.இ.-4 -