பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 புல்லின் இதழ்கள்

சுந்தரியுடன் கோபித்துக் கொண்டு வந்த சுப்பராமன் அதன் பிறகு நீண்டநாள்வரை திருவிடைமருதூர்ப் பக்கம் எட்டிப் பார்க்காமலே இருந்துவிட்டார். அவரது உள்ளத் தில் அவளை எப்படியாவது மறந்துவிட வேண்டும் என்ற எண்ணந்தான் முழுக்க முழுக்க இருந்தது. ஆனால் ஒருநாள் அவருடைய நண்பர் பிடில் பஞ்சாமி சுந்தரியைப் பற்றிக் கூறிய செய்தியைக் கேட்டதும் சுப்பராமன் பதறிப் போனார்.

உடனே மறு ரெயிலிலேயே திருவிடை மருதுரருக்குச் சென்று சுந்தரியைக் கண்டார். படுத்த படுக்கையாய் இருந்த அவளைப் பார்த்ததும் அவர் கண்ணில் நீர்கசிந்தது. அழகு கொழிக்கும் அவளது பொன்னிற மேனி, மெருகு குன்றி களையிழந்து காட்சியளித்தது. அலையலையாக நெளியும் கருங்கூந்தல் எண்ணெய் கண்டு பல நாட்கள் ஆகிக் காற்றில் பறந்து கொண்டிருந்தது. அழகையே அவள் அழித்துக் கொண்டு வாழும்போது-அழகுக்கு அழகூட்டும் நகை களையா அணிந்துகொள்ளப் போகிறாள்: சூறையாடப் பட்ட இளவரசி போல் அவள் மஞ்சத்தில் கிடந்தாள்.

பாகவதரைந் கண்டதும் அவளது முகத்தில் ஒர் ஒளி பிறந்தது. வறண்டிருந்த உதடுகளில் ஜீவ களையுள்ள புன்னகை பூத்தது. எழுந்திருக்க முயன்றாள். அவளால் இயலவில்லை. திரும்பப் படுக்கையில் விழுந்துவிட்டாள்.

பேசாமல் அப்படியே படுத்திரு’ என்று செல்லமாய் அதட்டினார். உதவிக்கு அருகில் ஒரு சிறு பெண் மட்டுமே

L.

இருந்தாள். பாட்டியைக் காணவில்லை.

சுந்தரியிடம், பாட்டி எங்கே என்று விசாரித்தார். விழித் திரைகளில் நீர் படிய அவள் முகத்தைத் திருப்பிக் கொண் டாள். பாட்டியம்மாவா? அவுங்க ஒரு மாசத்துக்கு முன்னமே செத்துப் போயிட்டாங்களே!’ பக்கக்தில் இருந் சிறுமி தான், பாகவதருக்குப் பதில் அளித்தாள். சுப்ப ராமனுக்குத் திக் கென்றது. எவ்வளவு பெரிய துக்கத்தைச்