பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 புல்லின் இதழ்கள்

ஆனால் அவர்களில் ஒரு பெண் கூட இல்லை. ஆம், இந்த விஷயத்தில்தான் பாகவதர் தீவிரவாதியாயிற்றே. தனக்காக அவர் எவ்வளவு தூரம் கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கிறார் என்பதையும், விட்டுக் கொடுத்து விட்டு அகப்பட்டுக் கொண்டு விழிப்பதையும் ஒரு கணம் மனத்துக்குள் எண்ணிப் பார்த்து நகைத்துக் கொண்டாள் சுந்தரி.

அவள் சுவாமிமலைக்கு வந்து ஏழெட்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அப்போது சுந்தரி ஐந்து மாதங்களாகி யிருந்தாள். அவளை நல்ல நாள் பார்த்து ஊருக்கு அனுப்பி வைத்தாள் லட்சுமி, கூடவே அவளுக்குத் துணையாக, விட்டோடு இருந்து கவனித்துக்கொள்ளக் கூடிய நல்ல சமையற்காரி அம்மாளையும் அனுப்பி வைத்

தாள.

சுந்தரி சுவாமி மலையில் இருந்தபோது புதிதாகச் சில உருப்படிகளைப் பாடம் பண்ணியிருந்தாள். இன்னும் சில புதிய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணிக்கொண்டு போக வேண்டும் என்பது அவள் விருப்பம் இன்னும் இரண்டு மாசம் கழித்துப் போகிறேனே அக்கா?’ என்று கேட்கலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் அதற்குப் போதிய துணிவு இல்லாததால் விட்டு விட்டாள். ஆனால் அவளுடைய தயக்கத்தைக் கண்டு லட்சுமியே, ‘ஒன்றுக்கும் கவலைப்படாமல் போய் இரு. நானும் அவருமாக அங்கு வந்து உன்னுடன் மாறி மாறி இருக்கத்தான் போகிறோம். தம்பூரா நாதத்தைக் காற்றா கொண்டு போய்விடும்? தைரியமாகப் போய்வா. பிரசவத்துக்கு, நான்தான் கூட இருக்கப் போகிறேன். கவலைப்படாதே’ என்று ஆறுதல் கூறினாள்.

சுந்தரியும் சிரித்துக்கொண்டே, பூட்டியிருந்த இரட்டை மாட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். சமையற்