உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூசைப் பாமாலை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 மாய னே!மறி கடல்விடம் உண்ட வான வா!மணி கண்டத்துஎம் அமுதே! நாயி னேன் உன்ே நினையவும் மாட்டேன்; 'நமச்சி வாய்' என்று உன் அடி பணியாப் பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய். பிறைகு லாம்சடைப் பிஞ்ளுக னேயோ! சேயன் ஆகிநின்று அலறுவது அழகோ? திருப்பெ ருந்துறை மேவிய சிவனே! - மணிவாசகர், 88 மைவரும் கண்டத்தர் மைந்தகந் தாஎன்று வாழ்த்தும் இந்தக் கைவரும் தொண்டு அன்றி மற்று அறி யேன் கற்ற கல்வியும்போய்ப் பைவரும் கேளும் பதியும் கதறப் பழகிநிற்கும் ஐவரும் கைவிட்டு மெய்விடும் போதுஉன் அடைக்கலமே. - அருணகிரிகாதர், i 3 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/141&oldid=836353" இலிருந்து மீள்விக்கப்பட்டது