உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூசைப் பாமாலை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 பால்நினேந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியே னுடைய ஊனினே உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பு:இலா ஆனந்தம் ஆய தேனினச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெரு மானே! யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப்பிடித்தேன் எங்குஎழுந்து அருளுவது இனியே. - மணி வாசகர், 96 கலையெலாம் புகலும் கதியெலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம் நிலையெலாம் நிலேயின் நேர்ந்து அது பவஞ்செய் நிறைவுஎ லாம் விளங்கிடப் பொதுவில் மலைவு இலாச் சோதி அருட்பெரும் செங்கோல் வாய்மையால் நடத்தும்ஒர் தனிமைத் தலைவனே! எனது தந்தையே! நினது தனையன் நான் தளருதல் அழகோ! - இராமலிங்க சுவாமிகள். 138

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/145&oldid=836357" இலிருந்து மீள்விக்கப்பட்டது