உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பூர்ணசந்திரோதயம்-1 பட்டிருந்த கோலாட்டக் கயிறுகள் அவிழ்த்துவிடப் பட்டன அவர்களுள் நால்வர் பாட்டுப் பாடிக் கொண்டு பின்னல் கோலாட்டம் போடத் தொடங்கினர். மிகுதியிருந்த ஒருத்தியும், அன்னமும் சுருதிபோட்டுப் பின்பாட்டுப் பாடத் தொடங்கினர் அவ்வாறு அவர்கள் அடித்த கோலாட்டத்தில், அந்த வடிவழகிகள் நால்வரும் அற்புதமாகவும், அழகாகவும், புதுமையாகவும் வளைந்து வளைந்து குனிந்து நிமிர்ந்து ஒருவருக்குள் ஒருவர் நுழைந்து சென்றபோது, அவர்களது மேனியின் அமைப்பும் அழகும் ஆயிரமடங்கு அதிகரித்துத் தோன்றி அந்த இரண்டு புருஷர்களது மனதிலும் காமத்தீயை மூட்டின. அவ்வாறு இரண்டுமணி நேரம் நடத்தப்பட்ட பிறகு அந்தக் கோலாட்டத்தையும் அவ்வளவோடு நிறுத்தும் படி இளவரசர் உத்தரவு செய்ய, பெண்கள் அதையும் உடனே நிறுத்தினார்கள். இளவரசரும் ஜெமீந்தாரும் அப்போதும் ஆனந்தசாகரத்தில் கிடந்து தத்தளித்து ஆழ்ந்து மிதந்து பரவசம் அடைந்திருந்தனர். அந்தச் சமயத்தில் அன்னம் இளவரசரைப் பார்த்து, "தாகத்துக்கு ஏதாவது கொஞ்சம் பார்க்கலாமா? மணி பன்னிரண்டாகிறது. நிரம்ப நேரமாக உட்கார்ந்திருந்தது அலுப்பாக இருக்குமே” என்றாள். உடனே இளவரசர் அவளைப் பார்த்துப் புன்னகை செய்து, 'ஒகோ சுகம் அதுபவித்துக்கொண்டு சும்மா உட்கார்ந்து கொண்டிருந்த எங்களுக்குத்தான் நிரம்ப சிரமம் போல விருக்கிறது! நீயும் உன்னுடைய பெண்களும் 8மணி முதல் பாட்டுப்பாடிக் கோலாட்டம் அடித்து எவ்வளவோ பிரயாசைப் படுகிறீர்கள். ஆகையால், உங்களுக்குத்தான் அலுப்பாக இருக்கும். நீங்கள் போய் ஏதேனும் ஆகாரம் பார்த்துக் கொண்டு வாருங்கள். இந்த அகாலத்தில் நான் எதையேனும் சாப்பிட்டால், அது உடம் புக்குக் கெடுதல் செய்யும். நம்முடைய ஜெமீந்தாரை அழைத்துக்கொண்டு போய், எனக்குச் செய்யும் மரியாதைகளை யெல்லாம் அவருக்குச் செய்தனுப்பு என்றார்.