பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7-வது அதிகாரம் பாரசீகத்துப் பைங்கிளி அவ்வாறு திடீரென்று தோன்றிய அந்த மனமோகன ரூபிணி யின் அபாரமான அழகும் காந்தியும் பளிச்சென்று இளவரசரது திருஷ்டியில் வந்து மோதவே, அதுகாறும் அவரது மனதில் நிறைந்துவதைத்துக் கொண்டிருந்த பெருந்திகிலும், கலக்கமும், வியப்பும், கவலையும் ஒரே நொடியில் பறந்துபோக, அந்தத் துன்பகரமான சம்பவம் முடிவில் இன்பகரமானதாக மாறியதைப் பற்றி, அவரது மனதில் மட்டிலடங்காமகிழ்ச்சியும் பூரிப்பும் பொங்கியெழுந்தன. அவர்அவள்மீது வைத்த விழியை எடுக்காமல் ஸ்தம் பித்து மயங்கிக் கல்லாகச் சமைந்து அசையாமல் அப்படியே நின்றார். அந்த மடந்தைக்குச் சுமார் இருபது வயதிற்கு அதிகம் இராதென்பது நிச்சயமாகத் தெரிந்தது. அவள் பார்சீஜாதி ஸ்திரீ போல ஆடையாபரணங்களை அணிந்திருந்தாள். அவளது உடம்பு தந்தத்தினால் செய்து மெருகு கொடுக்கப்பட்டது போலவும், சிறிதும் குற்றம் குறைபாடு கூறுதற்கு இடமில்லாமல் உருட்சி திரட்சியாகவும், அழகும் இனிமையுமே வடிவெடுத்து வந்ததுபோலவும் இருந்தது. அவள் வெள்ளை நிறப் புடவை யொன்றை அணிந்து கொண்டிருந்தாள். அந்தப் புடவை பட்டு நூலினால் நெய்யப்படாமல் பட்சிகளின் இறகிற்குள் உடம் பின்மீது காணப்படும் மகாநுட்பமான பூமயிரினால் நெய்யப்பட்டதோ, அல்லது, காற்றினால் நெய்யப்பட்டதோ அல்லது, சொப்பனத்தினால் நெய்யப் பட்டதோ என்று சந்தேகிக்கத் தகுந்தபடி, கனமே இல்லாமல் மிகமிக நுட்பமாக இருந்ததன்றி, பளிங்குபோல அப்புறத்திலிருந்த வஸ்துக்களை இப்புறத்தில் காட்டியது. அவள்மீது ஒர் ஆடை இருக்கிறதாக, அதன் நிறத்தினால் தெரிந்துகொள்ள