உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பூர்ணசந்திரோதயம்-1 பூத் தொட்டிகளும், ஸோபாக்களும், பஞ்சணைகளும், வெண்கலச் சிலைகளும், முத்துத் தொங்கல்களும், வால்ஷேட்குளோபுகளும் நிறைந்து அந்தச் சக்கரவர்த்தினி வீற்றிருப்பதற்கு முற்றிலும் பொருத்தமான இடமாகத் தோன்றியது. அவ்வாறு காணப்பட்ட ஜெகன்மோகன சிங்கார விடுதியில் வெல்வெட்டு லோபாவின் மீது ஒய்யாரமாகச் சாய்ந்து மந்தஹாலம் செய்த முகத்தோடு தனது பார்வையைத் தனக்கெதிரிலிருந்த ஒரு பதுமையின்மீது செலுத்திய வண்ணம் சித்திரப்பாவைபோல அந்தப் பார்சீ ஜாதி அணங்கு வீற்றிருக்க, இளவரசர் இமைகொட்டாமல் கால் நாழிகை நேரம் வரையில் அசையாது அப்படியே நின்று அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த அதிரூப மோகனாங்கியின் முகம் முதல் நகம் வரையிலுள்ள ஒவ்வோர் அங்கத்தின் அபூர்வ அமைப்பும் அவரது ஐம் புலன்களையும் மயக்கி ஒருவித வெறியும் போதையும் கொள்ளச் செய்ததாகையால், அவர் நிலைகலங்கி, தாம் என்ன செய்வதென்பதை உணராதவராய் ஸ்தம்பித்து நின்றார். அவர் வந்ததை அவள் ஆரம்பத்தில் உணராமலே இருந்தாளோ அல்லது உணராதவள்போல நடித்தாளோ, ஆனால், அவள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பவள்போல அந்த ஸோபாவில் ஒய்யாரமாகச்சாய்ந்து, சுவரில் தீட்டப்பட்ட சித்திரம் போல அசைவற்று வீற்றிருந்தாள். அவள் பிறர் வந்திருப்பதைக் கருதி நாணிக்கோணி உடம்பை விகாரப்படுத்திக் கொள்ளாமல் சுயேச்சையாகத் தனது இயற்கைப்படி தனது தேகத்தை இருக்கவிட்டிருந்ததனால், அவளது வசீகரத்தன்மையும் இயற்கை எழிலும் பன்மடங்கு சிறந்து தோன்றின. அவ்வாறு அழகின் திரளாக வீற்றிருந்த பெண்மணி இரண்டொரு நிமிஷத்தில் தனது சிரத்தை இளவரசரிருந்த பக்கமாக மெல்லத் திருப்பினாள். அவளது விசாலமான கருவிழிகள் அவரது முகத்தைப் பார்த்தனவானாலும் அவள் திடுக்கிடவுமில்லை;