பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 107 இரண்டையும் குறிக்கிறது. ஒரு புருஷர் ஒரு பெண்ணினிடத்தில் காதல் கொண்டு விடுவாராகில், அவளது தேகத்தில் காணப்படும் குற்றங் குறைபாடுகளெல்லாம் அவருக்கு அத்தனை அழகுகளாகத் தோன்றும்; அதோடு அவளை அடைவதற்குத்தாம் எப்படிப்பட்ட கேவலமானகாரியங்களைச் செய்கிறோமே யென்பதும் அவருடைய மனசுக்குப் படாது. இது ஆண் பெண் ஆகிய இரண்டு வகுப் பாருக்கும் ஒத்த நியாயம். அதுபோலவே, இப்போது இந்தக் காரியமும் நடத்தப்பட்டிருக்கிறது. எவ்வளவோ உன்னத பதவியிலிருக்கும் மகாராஜாவுக்கு இந்த ஏழையினிடத்தில் தயை பிறக்குமோ பிறக்காதோ வென்றும், வேறுவிதமாக அழைத்தால், வருவாரோ மாட்டாரோ வென்றும் நினைத்தே, இந்தக் காரியம் நடத்தப்பட்டது. ஈசுவரரை ஒரு பக்தன் கல்லால் அடித்தான்; இன்னொருவன் அவர் மேல் எச்சிலை உமிழ்ந்து செருப்பைத் தலையில் வைத்தான். ஈசுவரர் அவைகளெல்லாம் அன்பின் பெருக்கினால் செய்யப்பட்ட காரியங்கள் என்று எண்ணி, அவற்றையெல்லாம் நல்ல காரியங்களாக ஏற்று அவர்களின் மேல் சந்தோஷம் கொண்டு அவர்களுடைய பக்திப் பெருக்கை மாத்திரம் கருதி மோக்ஷம் கொடுக்கவில்லையா? அதுபோல, தாங்கள் எங்களுடைய நல்ல எண்ணத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு மற்றவைகளை மறந்துவிட வேண்டும் 'என்று குயில்வாய் திறந்து பேசுவது போலக் கூறினாள். அதைக் கேட்ட இளவரசர், “ஆகா பேஷ் பேஷ் நீ பேசுகிற பேச்சின் அழகே ஒரு கோடி பெறும்போல இருக்கிறதே! ஏன் அவ்வளவு தூரத்தில் நிற்கிறாய்? முதலில் நீ வந்து இப்படி ஸோபாவில் உட்கார்ந்துகொள். நீ நிற்பதைக் காண என் மனம் பதறுகிறது. உனக்கு என்னிடத்தில் ஒருவித ஆசை ஏற்பட்டிருக்கிறதென்று சொல்லுகிறாய். அப்படியிருந்தும், அவ்வளவு தூரத்தில் நிற்க வேண்டிய தென்ன? மரக்கொம்பி லிருக்கும் பழத்தைப் பார்த்து மனிதர் ஆசைப்பட்டு, தொரட்டைக் கொண்டு முயன்றோ கல்லால் அடித்தோ,