உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 111 என்னைக் கட்டிக்கொடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். நான் இந்த ஊருக்கு வந்தபிறகு தங்களுடைய அழகு, படிப்பு, புத்திசாலித்தனம், பேசுந்திறம், ஈவிரக்கம், தயை தாrண்யம் முதலிய நற் குணங்களையெல்லாம் கேள்விப் பட்டேன். தங்களைப் பார்க்கவேண்டுமென்ற விலக்கமுடியாத ஒர் ஆசை என் மனசில் உண்டாகிவிட்டது. நானோ கோஷாஸ்திரீயாகையால் வெளியில் வந்து தங்களைப் பார்க்கமுடியாமல் இருந்தது. ஆகையால், நான் ஒரு சித்திரக்காரனை அழைத்துத் தங்களைப்போலவே திருவுருவப் படமொன்று தயாரித்துக் கொண்டு வரும் படி சொல்லி அவனுக்கு ஏராளமான பணம் கொடுத்தேன். அவன் அப்படியே தயாரித்துக்கொண்டுவந்து கொடுத்தான். அந்தத் திருவுருவப் படத்தைப் பார்த்ததுமுதல் எனக்குத் தங்களுடைய பைத்தியமே பெரிய பைத்தியமாகப் பிடித்துக் கொண்டது. புருஷரென்று அணைந்தால், தங்களைத்தான் அணைகிறது; இல்லையானால், இந்த உடம்பை இந்த ஊரின் மண்ணுக்கே இரையாக்கி விடுகிறதென்று நான் தீர்மானித்துவிட்டேன். என்னுடைய மனநிலைமையை அறிந்துகொண்ட என்னுடைய தாயாரும் தகப் பனாரும் என்னைப் பார்த்து, 'குழந்தாய் ! நாம் பார்சீ ஜாதியைச் சேர்ந்தவர்கள். இந்த ஊர் மகாராஜா மகாராஷ்டிர ஜாதியைச் சேர்ந்தவர். நமக்கும் அவர்களுக்கும் கிரமப்படி கலியாணம் செய்யமுடியாது. அவர் உன்னை வைப்பாட்டி யாகத்தான் வைத்துக் கொள்வார். நாங்கள் எவ்வளவோ அருமையாக வளர்த்த எங்களுடைய ஒரே பெண்ணான உன்னை அப்படிப்பட்ட கேவல நிலைமையில் விட எங்களுக்குச் சம்மதமே இல்லை. ஆகையால், நீ இந்த ஆசையை விட்டுவிடு' என்று நயமாகக் கண்டித்துக் கூறினார்கள். அவர்கள் சொன்ன வார்த்தை என்னுடைய மனசில் படவேயில்லை. நான் எப்படியாகிலும் பிரயாசைப்பட்டு, தங்களைப் புருஷராக அடைவேனே தவிர, வேறே யாரையும் நான் கண்ணாலும் பார்க்க மாட்டேனென்று ஒரே பிடிவாத