பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பூர்ணசந்திரோதயம்-1 உண்டாகிவிட்டன. ஆனால், நான் உன்னை மனிதர் அறியத் தாலி கட்டி சம்சாரமாக்கிக் கொள்ளமுடியாமல் போனாலும், தெய்வம் சாட்சியாக நான் உன்னை என்னுடைய பட்டமகிஷி ஆக்கிக்கொள்ளுகிறேன் என்பதற்கு நான் எவ்வித உறுதி வேண்டுமானாலும் செய்து கொடுக்கிறேன். என்னுடைய பட்ட மகிஷிக்கெல்லாம் மேலானவளாக உன்னை நான் மதித்துச்சகல காரியங்களிலும், நான் உன்னுடைய மனம்போல நடந்து கொள்ளுவேன் என்பதை நீ பிரமாணமாக நம்பலாம். இவ்வளவுதானே உனக்கு வேண்டியது? இனிமேலாகிலும் நீ எனக்குச் சமீபத்தில் வந்து இன்பம் கொடுக்கலா மல்லவா? ஏன் இன்னமும் அவ்வளவு தூரமாக நிற்கிறாய்?" என்று கூறியவண்ணம் கட்டிலடங்காக் காம வெறி கொண்டவராய் எழுந்து அவளைப் பிடிக்கப் பாய, அவள் தனது வசீகரமான அழகிய பல் வரிசைகளைக்காட்டி கெஞ்சி நயந்தவளாய், "கொஞ்சம் பொறுங்கள்; பொறுங்கள். தாங்கள் என்னை நாடி வரும்படியான சிரமமில்லாமல், நானே இன்னம் இரண்டொரு நிமிஷ நேரத்தில் தங்களிடத்திற்கு வந்து சேருகிறேன். உட்காருங்கள் உட்காருங்கள்' என்று பணிவாகவும் குழைவாகவும் வேண்டிக்கொள்ள, அவர் அதை மீறமாட்டாதவராய்த் திரும்பி வந்து லோபாவின் மேல் உட்கார்ந்து கொண்டு, 'அடீ என் தங்கமே எல்லா விஷயமும் முடிந்துபோயும், நீ இன்னமும் ஏன் என்னை இப்படிக் கொல்லுகிறாய்? உன்னை ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டுமென்று என்னுடைய உடம்பு பறக்கிறது. என் மனசிலுள்ள ஆசையானது மார்பைக் கிழித்தெறிந்து விடும்போல இருக்கிறது. இன்னமும் இரண்டொரு நிமிஷம் பொறுக்க வேண்டிய காரணமென்ன? இன்னமும் உனக்கு என்ன சந்தேகம் இருக்கிறது?’ என்று மிகுந்த பதைப்போடு பேசினார். அதைக் கேட்ட அந்த ஸ்திரீ, 'எனக்கு வேண்டிய உறுதியை எல்லாம் தாங்கள் செய்து கொடுத்துவிட்டீர்கள்