பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 129 | உட்கார்ந்திருந் தாலும் அவள் வரப்போகிறதில்லை. நிற்பதில் உபயோகம் ஒன்றுமில்லை. வாருங்கள் போகலாம்” என்றான். அதைக் கேட்ட இளவரசர் கரைகடந்த வியப்பும் பிரமிப்பும் அடைந்து, "என்ன ஆச்சரியம்! அவள் மந்திரவாதி தானா? உனக்கு நிச்சயமாகத் தெரியுமா? அப்படியானால், அவள் என்னை இங்கே எதற்காக வரவழைத்தாள்? அப்படி வரவழைத்ததைப் பற்றி எழுத்து மூலமான மன்னிப்பு வாங்கிக்கொண்டு போகவேண்டிய காரணமென்ன? எனக்கு ஒன்றும் நன்றாக விளங்கவில்லையே!" என்றார். கட்டாரித்தேவன், “எனக்கு எவ்வித விவரமும் தெரியாது. நீங்கள் எந்த விஷயத்தையும், என்னிடத்தில் கேட்பதில் பயனில்லை. அவள் உங்களை எதற்காக வரவழைத்தாளோ, அது அவளுக்குத்தான் தெரியவேண்டும். அவள் மன்னிப்புத்தான் எழுதி வாங்கினாளோ, வேறே பெரிய சங்கதி எதாகிலும் எழுதி அதில் உங்களுடைய கையெழுத்து வாங்கினாளோ, அதுவும் அவளுக்குத்தான் தெரிய வேண்டும். ஆனால், உங்களை இப்போது உங்களுடைய பாதையில் கொண்டுபோய் விடும் காரியம் ஒன்றுதான் எனக்குத் தெரியும்” என்றான். அதைக் கேட்ட இளவரசர் கனவில் இருப்பவரைப் போல மயங்கிக் கலங்கி திக்பிரமைகொண்டு நின்று, "அவள் எழுதிக் காட்டிய மன்னிப்பை நான் வாசித்துப் பார்த்தேனே! அதில் எவ்வித வித்தியாசமும் தெரியவில்லையே! என்றார். கட்டாரித்தேவன், 'அதுதான் சாமர்த்தியம். எவ்வித வித்தியாசமும் தெரியாதபடிஏமாற்றுவதுதான்சரியானதந்திரம். அது அந்தப்பெண்ணின்புத்திசாலித்தனத்தையும் மகாராஜாவின் முட்டாள்தனத்தையும் காட்டுகிறதேயன்றி வேறல்ல. அது எப்படியாவது போகிறது. இனி நான் உங்களோடு பேசத் தயாராக இல்லை. பேச்சு இவ்வளவோடு நிற் கட்டும். வரலாம்' என்று கண்டித்துப் பேசினான். பூ.ச.i-10