உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 135 தெரியவில்லையே! அதுபோனாலும் போகட்டும் என்றால், நாம் அம்மன்பேட்டைக்கு வந்திருக்கிறோம் என்பதை அறிந்து ஆள்களைவிட்டு இவ்வளவு சாமர்த்தியமாக நம்மைக் கொண்டுவரச் செய்தவள் தன்னுடைய வரலாற்றையெல்லாம் சொல்லிவிட்டு என்னுடைய மன்னிப்பையும் எழுதி வாங்கிக் கொண்டு போகவேண்டிய காரணமென்ன என்பது தெரிய வில்லையே; உமக்குப் போனதுபோல என்னிடத்தில் இருக்கும் சொத்துக்களையெல்லாம் அவர்கள் பிடுங்கிக் கொண்டு அதோடு நம்மை விட்டிருந்தால்கூட அதைப்பற்றி எனக்குக் கொஞ்சமும் விசனமும் உண்டாயிருக்காது. இவ்வளவு பிரமாதமாக என் மதியை மயக்கி, என்னுடைய ஆசையைக் கிளப் பிவிட்டுக் கடைசியில் போய் விடுகிற தென்றால், அது சகிக்க முடியாத விசனமாக அல்லவா இருக்கிறது. அவள் என்னை வஞ்சமாக ஏமாற்றிவிட்டுப் போயிருந்தால், அதைவிட அதிகமான அவமானமும் வெட்கக் கேடும் உண்டாகப் போகிறதில்லை. அப்படி இல்லாமல் திடீரென்று ஏற்பட்ட அபாயத்தினாலோ, அல்லது, வேறேதக்க காரணத்தினாலோ அவள் மறைந்து போயிருந்தால், அதைப் பற்றி நாம் அவள் மேல் வருத்தம் கொள்ளவாவது, அவளைப் பற்றி இழிவான அபிப்பிராயம் கொள்ளவாவது நியாயமே இல்லை. எப்படியிருந்தாலும், அவளைத் தேடிப்பிடித்து இன்னொரு தரம் பார்க்காவிட்டால் என்னுடைய தாகவிடாய் தணியாதுபோல இருக்கிறது. அவள் நம்மை வஞ்சித்திருந்தால் நாம் அவளுக்குத் தகுந்த சிrை நடத்தியே தீரவேண்டும். அல்லது, அவளை மீறிய காரணத்தினால், அவள் மறைந்துபோயிருந்தால், நாம் அவளை மறுபடியும் கண்டு, எனக்கும் அவளுக்கும் பரஸ்பரம் ஏற்பட்டுள்ள காதலின் பலனை நாங்கள் அடைந்தே தீரவேண்டும். ஆகையால், நாம் இந்த விஷயத்தை இவ்வளவோடு விட்டுவிடாமல், பலவகையில் முயற்சி செய்து அவளைக் கண்டுபிடிக்கும் மார்க்கத்தைத் தேட வேண்டும். இந்த விஷயத்தில் எல்லாம்