உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பூர்ணசந்திரோதயம்-1 கூடாது என்று நிர்ப்பந்தம் செய்வதனால், கட்டின பெண் ஜாதிக்குத் துன்பமே யன்றி நன்மை யுண்டாகாது. ஆகையால், முட்டாள் ஜனங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள கலியாணம் என்ற பைத்தியக்காரத்தனமான கட்டுப்பாட்டை நான் ஒரு நாளும் இலட்சியம் செய்வதே இல்லை. நீ மகா விவேகி யாகையால் நீயும் இந்த விஷயத்தில் என்னைப் போலவே அபிப்பிராயப்படுவா யென்றே நான் உறுதியாக நம்புகிறேன்" என்று மிகவும் நயமாகக் கூறினார். அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் மிகுந்த வியப்பும் திகைப்பும் பதைப்பும் கோபமும் கொண்டவளாகத் தோன்றி, "ஐயா! நீர் இப்போது பேசிய வார்த்தைகளெல்லாம் காமாதுரர்களான துராத்மாக்களின் வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளே யன்றி, ஒர் நிர்ணயத்தில் நிற்கக்கூடிய மனோதிடமுடைய யோக்கியமான மனிதர் சொல்லத்தக்கவை யல்ல. நான் உம்முடைய சம்சாரத்தைவிட அதிக அழகாக இருப்பதால், இப்போது நீர் என்னிடத்தில் பிரமாதமான காதல் கொண்டிருப்பதாகவும், எனக்காக உயிரைக் கொடுத்து விடுவதாகவும் சொல்லுகிறீர்; நாளையதினம் என்னைவிட அதிகமான அழகுள்ள வேறொருத்தியைக் கண்டால் என்னைவிட்டு அவளைப்பிடித்துக்கொள்வீர். இப்படி அடிக்கடி மாறும்படியான சபலசித்தமுள்ள மனிதர்களை எந்த ஸ்திரீயும் நம்புவதும் காதலிப்பதும் கூடவே கூடாது. இப்படிப்பட்ட வர்களை எவரும் கலியாணம் செய்வதே தகாத காரியம். உமக்குச் சம்சாரமாக ஏற்பட்டிருக்கும் அந்தப் பெண் பூர்வ ஜென்மத்தில் என்ன பாவம் செய்தாளோ தெரியவில்லை. அதனாலேயே அவள் உமக்குப் பெண் ஜாதியாக வந்து மாட்டிக் கொண்டிருக்கிறாள். உம்மைப் பார்ப்பதும், உம்மோடு பேசுவதும் மகாகொடிய பாவம். ஆகையால், நீர் இவ்விடத்தை விட்டு மரியாதையாக வெளியில் போகப்போகிறீரா? அல்லது, உமக்கு வழிகாட்ட என்னுடைய வேலைக்காரனை அழைக்க வேண்டுமா? என்ன