உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பூர்ணசந்திரோதயம்-1 பூரித்துப் புளகாங்கித மடைந்தவராய், 'அடாடா! என்ன அழகு என்ன சொகுசு ஐயோ! இப்படிப்பட்ட தெய்வ கன்னிகையை அடையும் படியான பாக்கியம் எந்தப் புண்ணியவானுக்குக் கிடைக்கப் போகிறதோ? நான் தூரத்திலிருந்து பார்த்ததைவிட இப்போது இவளுடைய அழகு ஆயிரமடங்கு விசேஷமாகத் தோன்றுகிறதே! இவளுடைய ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்து ஆனந்திக்கப் பதினாயிரங் கண்கள் வேண்டும் போல் இருக்கிறதே! ஆகா! எவ்வளவு அபாரமான சிருஷ்டி இப்படிப்பட்ட மோகனாங்கியை நான் இதுவரையில் கண்டதே இல்லை' என்று தமக்குள் எண்ணிக் கொண்டவராய் அவளை நோக்கி, 'பூர்ணசந்திரோதயம்! எந்த இடத்திலும் வீட்டின் சொந்தக்காரருக்கும், குடியிருப் போருக்கும் அந்தரங்கமான பிரியம் இருப்பதே வழக்கமில்லை. ஆகையால், நான் வீட்டின் சொந்தக்காரன் என்கிற முறைமையில் உன்னைச் சந்திக்க நேர்ந்ததைப் பற்றி நிரம் பவும் விசனம் உண்டாகிறது. அழகே வடிவாக நிறைந்துள்ள அம்பாளின் சன்னிதியில் தரிசனம் பெற ஒரு பக்தன் வரும் முறைமைப்படி நான் வந்திருக்கிறேன் என்று சொல்வதே மிகவும் பொருத்தமான வாக்கியம்” என்றார். அதைக் கேட்ட பெண்மணி மிகவும் குறும் பாகவும் குத்தலாகவும் பேசத்தொடங்கி, "நீங்கள் சொல்வது அழகாக இருக்கிறதே; இந்த ஜெகன்மோகன விலாசத்தைப் பற்றி நீங்கள் எனக்கு விக்கிரய சாசனமோ, அல்லது வாடகைப் பத்திரமோ எழுத நேருமானால் அந்தப் பத்திரத்திலும் நீங்கள் இப்படிப்பட்ட பெருமைப்பாடான வார்த்தை களையும் முகஸ்துதியான வார்த்தைகளையும் எழுதுவீர்கள் போலிருக்கிறதே! என்று கூறினாள். உடனே அந்த யெளவன புருஷர் சந்தோஷத்தினால் மலர்ந்த முகத்தினராய் "ஓ! தடையென்னlஅப்பேர்ப்பட்ட சந்தர்ப்பம்