உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 - பூர்ணசந்திரோதயம்-1 மனசைக் கவர்ந்துவிட்டேன் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், நீங்கள் என்னுடைய மனசைக் கொஞ்சமும் கவரவே இல்லை. அதிலிருந்து என்னுடைய மனசைக் கவரக்கூடிய புருஷர் வேறே ஒருவர் இருக்கிறார் என்பது தெரிகிறது. ஆகையால், அப்படிப்பட்ட புருஷரை நான் கண்டால்தான் என் மனம் காதல் கொள்ளும்; அவருக்கும் என்னிடத்தில் பரஸ்பரமான மோகம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் என்னுடைய கலியாணம் நிறைவேறும். அதற்குமுன் நான் கலியானப் பேச்சை எடுப்பதே சரியல்ல. ஆசையால், நீங்கள் தயவுசெய்து அந்தப் பிரஸ்தாபத்தை விட்டு, வேறே விஷயம் ஏதாவது இருந்தால், அதைப்பற்றிப் பேசுங்கள். இப்படி நீங்கள் என்னிடத்தில் தந்திரம் செய்த விஷயத்தை நான் வேறே எவரிடத்திலும் வெளியிடமாட்டேன் என்ற உறுதியை நான் உங்களுக்குச் செய்துகொடுக்கிறேன். அது ஒன்றுதான், நீங்கள் இவ்வளவு பாடுபட்டதற்கு நான் செய்யக்கூடிய உதவி' என்றாள். அதைக்கேட்ட இனாம்தார் முன்னிலும் பன்மடங்கு அதிக உருக்கமாகவும் நைவாகவும் நயமாகவும் பேசத் தொடங்கி, 'பெண்மணி நீ சொல்வதெல்லாம் உண்மையான சங்கதிதான். என் மனசில் ஏற்பட்டிருப்பதுபோல உன் மனசிலும் காதல் ஏற்பட்டால் அன்றி கலியாணம் செய்ய முடியாது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதோடு நீ என்னை இப்போதுதான் முதன் முதலாய்ப் பார்க்கிறாய் என்பதையும் நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், நான் அடிக்கடி இங்கே வந்து உன்னோடு பேசிப் பழகி நட்பாக இருப்பதற்கு நீ அநுமதி கொடுப்பாயானால், என்னுடைய குணாதிசயங்களையும் நடவடிக்கைகளையும் காணக் காண உனக்கும் என்மேல் அன்பும், பிரியமும் ஏற்பட்டு விடும் என்பது நிச்சயம். ஆகையால், நீ சொல்லுகிறபடி கலியாணப்பேச்சை நாம் இப்போது பேசத் தேவையில்லை.