உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.76 பூர்ணசந்திரோதயம்-1 கோட்டான் போலத் தூங்கி வழிந்து எதையும் கவனிக்காதவன்போல நின்ற ராமன் இனாம்தாரது திருஷ்டியில் பட்டான். அவனைக் கண்ட இனாம்தார், 'பஞ்சண்ணா! உன்னுடைய தோழனான ராமனைப் பார்த்தவுடனே அவனுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது. அந்த வேலையை அவன் செய்து முடிப்பானானால், அவனுக்கு நூற்றுக்கணக்கில் பணம் கிடைக்கும் படி செய்கிறேன். நீ ஒரு காரியம் செய்கிறாயா?" என்றார். - பஞ்சண்ணாராவ், "என்ன காரியம் வேண்டுமானாலும் நான் எஜமானுக்குச்செய்யத்தடையில்லை; சொல்லலாம்” என்றான். சேரங்குளம் இனாம்தார், 'அந்த விஷயம் மிகவும் ரகசியமானது. ஆகையால், இந்த இடத்தில் சொல்லக் கூடியது அல்ல. இன்றைய தினம் ஒன்பது மணிக்கு ராமனை என்னுடைய ஜாகைக்கு அனுப்பிவை. நான் விஷயத்தைச் சொல்லி அனுப்புகிறேன்' என்றார். பஞ்சண்ணாராவ், "ஓ! அப்படியே தவறாமல் ஒன்பது மணிக்கு வந்து பார்க்கும் படி செய்கிறேன். தாங்கள் எப்படிப்பட்ட அலுவல் கொடுத்தாலும் தங்களுக்குத் திருப்தி உண்டாகும் படி ராமன் முடித்து வைப் பான். தாங்கள் அதைப் பற்றி யோசிக்கவேண்டியதில்லை. எனக்கு இப்போது சில்லறையாக ஒன்றும் வேண்டாம். முழு ரூபாயாக இருந்தால் ஒரே ஒரு ரூபாய் கொடுங்கள். ஒருவனுக்கு நான் அவசரமாகக் கொடுக்க வேண்டும். பிறகு கணக்கில் கழித்துக் கொள்ளலாம் ' என்று மிகவும் நிதானமாகக் கூறினான். அதைக் கேட்டவுடனே இனாம்தார் ஒரு ரூபாய் பணத்தை எடுத்து அவனிடத்தில் கொடுத்துவிட்டு, ராமனைத் தவறாமல் அனுப்பும் படி சொல்லிவிட்டுத் தமது வண்டியை ஒட்டச் சொல்ல, வண்டி உடனே புறப்பட்டுப் போய்விட்டது.