உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 187 என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த ஜெமீந்தாரது மனதில் மிகுந்த ஆத்திரமும் அருவருப்பும் உண்டாயின. அவர் தனது கையிலிருந்த கடிதத்தை மேஜையின் மீது அலட்சிய மாக எறிந்தவராய், 'போக்கிரிப் பையன்! அயோக்கியன் என்னுடைய உறவையே வெறுத்து என்னை அலட்சியம் செய்து விலக்கிவிட்டுப் போனான்; இப்போது என்னிடம் வருவதாக எழுத இவனுக்குக் கொஞ்சமும் வெட்கமில்லை. இருக்கட்டும். அவ்வளவு முறுக்காகப் போனவன் என்ன காரணத்தினால் திரும்பவும் என்னிடம் வருகிறான் என்பதை நான் அறிந்துகொள்ள வேண்டும். சரி; வரட்டும். ஆனால் ஒரு விஷயம் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. என்னைவிட்டுப் போன அண்ணனும் தங்கையும் என்னிடம் திரும்பி வருவது ஒரே நாளில் ஒத்துக்கொண்டது மிகவும் அதிசயமாக இருக்கிறது. கொஞ்சகாலமாக இவர்கள் இருவருக்குமே மன ஒற்றுமை இல்லை என்பது எனக்குத் தெரிகிறது. இப்போதும் இவர்கள் ஒருவரையொருவர் கலக்காமல் தனித்தனியாகவே தான் வருகிறார்கள் போல இருக்கிறது' என்று எண்ணியபடி இன்னம் சில கடிதங்களை எடுத்துப் பிரித்துப் படித்துப் பார்த்து அவைகள் அவ்வளவு முக்கியமான விஷயங்களல்ல என்று உணர்ந்து அவைகளை அலட்சியமாகப் போட்டுவிட்டு கடைசியாக இன்னொரு கடிதத்தை எடுத்துப் படித்தார். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது. எனது அந்தரங்க நண்பரும், மகாப்பிரபுவுமான ஜெமீந்தார் துரை அவர்களுடைய திவ்விய சமுகத்திற்கு தங்களுடைய அடியாரான அம் மணிபாயி மிகவும் தாழ்மையாக எழுதிக் கொள்ளும் விண்ணப்பம். மிகவும் அவசரமான ஒர் உதவியை நான் தங்களிடத்தில் நாடுகிறேன். அதைத்தாங்கள் மறுக்க மாட் டீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த விஷயம் இன்னதென்று