உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 - பூர்ணசந்திரோதயம்-1 மான அழகும், கூர்மையான அறிவும், கண்ணிய புத்தியும், மேலான குணங்களும் வாய்ந்த உத்தம புருஷன் என்பது ஜிலு ஜிலுவென்று ஜ்வலித்த குளிர்ச்சியான அவனது முகத்தோற்றத்தி லிருந்தே நன்றாக விளங்கியது. அப்படி இருந்தும் அவன் தனது பெரிய தகப்பனாரிடத்தில் அளவிறந்த அருவருப்பும் குரோதமும் கொண்டவன்போலக் காணப்பட்டவனாய், அவரிருந்த இடத்திற்கு அருகில் போய், ஒர் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு, 'பெரியப்பா! நான் உங்களிடம் மறுபடியும் வரும்படியாக நேர்ந்தது எனக்கு நிரம் பவும் விசனமாக இருக்கிறது. இருந்தாலும் வேறே வழியில்லா திருப்பதால், நான் வந்திருக்கிறேன்' என்று நயமாகக் கூறினான். அந்த வார்த்தையைக்கேட்ட மருங்காபுரி ஜெமீந்தாரது முகம் கோபத்தினால் கருத்தது. கண்கள் கோவைப் பழம் போலச் சிவந்தன. தேகம் படபடவென்று துடித்தது. இருந்தாலும் அவர் தமது கோபத் தை ஒருவாறு அடக் கிக் கொண்டு, 'ஏனப்பா என்னிடத்தில் வந்தால், என்னுடைய உடம்பி லிருந்து ஏதாவது பயங்கரமான தொற்றுவியாதி கிளம்பிவந்து உன்னைப் பிடித்துக் கொள்ளும் என்று எண்ணுகிறாயா? கடுகு சிறுத்தாலும், காரம் குறை யாது என்றபடி நீ பேசுகிறாய் போலிருக்கிறதே! என்று மனத்தாங்கல் அடைந்தவர்போலப் பேசினார். அதைக் கேட்ட கலியாணராமன், 'பெரியப் பா! நான் சாதாரணமாகப் பேசும்போதே நீங்கள் இப்படிக் கொடுரமாகப் பேசுகிறீர்கள். கடைசியில் நான் சண்டையிட்டேன் என்று ஆயாசப் பட்டுக் கொள்வீர்கள். பெரியப்பா, பெரியப்பா வென்று நான் அதிக வாஞ்சையோடு உங்களிடம் ஒட்டிக் கொண்டு உங்களுக்குப் பிரமாதமான மரியாதை செய்யா விட்டாலும், நான் உங்களை ஒரு நாளும் அவமரியாதை யாகவாவது அலட்சியமாகவாவது நடத்தக் கூடியவனல்ல. அப்படிஇருக்க, இல்லாத பொல்லாத வார்த்தைகளை எல்லாம் 'ஏன் உபயோகிக்க வேண்டும்?' என்றான்.