பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 211 காணப்படவில்லை. அதற்குப்பதிலாக அந்த இடத்தில் அவரது தினசரி டைரிப் புஸ்தகம் இருந்த உறை அவரால் சீல் செய்யப்பட்டபடி கொணர்ந்து வைக்கப்பட்டிருந்தது! அது என்ன விநோதம்! என்ன செப்பிடு வித்தை அவர் அந்தப் பூத்தொட்டிக்குள் தமது கையை விட்டு நன்றாகத் தடவிப் பார்த்தார். பிஸ் டல் போய் விட்டதென்பது நிச்சயமாகத் தெரிந்தது. அவர் மிகுந்த பிரமிப்பும் திகைப்பும் அடைந்தவராய், அளவிறந்த ஆவலோடு பார்த்தார்; எல்லாம் ஒழுங்காகவே இருந்தது. அவர் மிகவும் பதைப்பாக அந்த சீல்களை நீக்கிவிட்டு உறையைக் கிழித்து உள்ளே இருந்த தினசரி டைரியை இழுத்துப் பார்க்க அது தமது புஸ்தகமாகவே இருந்தது. அதையும் அவர் பிரித்து அதற்குள் தம்மால் வைக்கப்பட்டி ருந்த கடிதங்கள் எல்லாம் போகாமல் இருக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்த்தார். எல்லாக் கடிதங்களும் தாம் வைக்கப்பட்டபடியே இருந்ததைக் காண, அந்த ஜெமீந்தாருக்கு உண்டான ஆநந்தத்திற்கும் ஆச்சரியத்திற்கும் அளவே இல்லை. கண்கட்டு வித்தையில் கண்ணிற்கெதிரிலேயே புதிய புதிய சாமான்கள் தோற்றுவதுபோல தாம் அதே இடத்தில் இருக்கையில் அந்த டைரிப் புஸ்தகம் அந்த இடத்தில் எப்படி வந்திருக்கும் என்ற சந்தேகமும், திகைப்பும், குழப்பமும் எழுந்தன. அவர் கால் மணி நேரம் வரையில் ஸ்தம்பித்து சித்திரப்பதுமை போல அப்படியே ஒய்ந்து நின்று விட்டார். அவர்தமது கண்களையே நம்பாமல் அந்தப் புஸ்தகத்தையும் கிழிபட்ட உறையையும் எடுத்து எடுத்து நாலைந்து தரம் உற்று நோக்கினார்; மறுபடியும் கையைத் தொட்டிக்குள் நுழைத்து அந்தப் பிஸ்டலைத் தேடிப் பார்த்தார்; அவர் தமது சட்டைப் பைக்குள் திருடனுக்காக ஆயத்தமாக வைத்துக்கொண்டிருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக் கற்றையை வெளியில் எடுத்து அதை அவிழ்த்து எண்ணிப் பார்த்தார். ஏனென்றால், அவருக்கு அவரை மீறி ஒரு சந்தேகம் உண்டாயிற்று. தாம் ஒருகால் இடையில் கொஞ்சநேரம் தூங்கிவிட்டோமோ என்றும்,