பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்காள் 213 நீ போய், நான் இங்கே அழைத்துக்கொண்டு வரச் சொல்வதாக ரகசியமாகச் சொல்லி அவனை உடனே அழைத்துக்கொண்டு வா' என்று கூற அவர் அன்று காலையிலிருந்து மூடுமந்திரம் போலச்செய்துவந்த காரியங்களின் கருத்தை இன்னதென்று அறியாமல் வியப்பும் பிரமிப்பும் அடைந்திருந்த கோவிந்தன் உடனே அவ்விடத்தைவிட்டுக் கீழே இறங்கி வெளியில் போய் விட்டான். ஜன்னலண்டை நின்ற ஜெமீந்தார், அவ்விடத்தைவிட்டு நடந்து தமது ஸோபாவை அடைந்து, அதன்மேல் உட்கார்ந்து கொண்டு சிந்திக்கலானார். 'என்ன ஆச்சரியம் இது காலையில் கோவிந்தன் இரண்டு பூத் தொட்டிகளையும் சோதித்துப் பார்த்துவிட்டு பிஸ்டல்களையும் செண்டுகளையும் வைத்திருக் கிறான். அப்போது நானே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை இந்த கோவிந்தனே காலையில் பிஸ்டல் வைக்கும்போது டைரியையும் வைத்திருப்பானா? இவனுக்கும் திருடனுக்கும் நட்பிருக்குமா? சே ஒருநாளும் இருக்காது. ஒரு நாளா இரண்டு நாளா! எத்தனை வருஷ காலமாக இவன் என்னுடைய அந்தரங்க மனிதனாக இருந்து, எத்தனையோ பெரிய உதவிகளையெல்லாம் செய்திருக்கிறானே. இவன் திருடனிடத்தில் நட்பாக இருந்தால், இரண்டாயிரம் ரூபாயைப் பெறாமல் தினசரி டைரியைத் திருப்பிக் கொடுத்திருக்க மாட்டான் அல்லவா! ஆகையால், நான் கோவிந்தனைப் பற்றிக் கொஞ்சமும் சந்தேகம் கொள்ளவே காரணமில்லை. இவன் வைத்துவிட்டுப் போனபிறகு இதுவரையில் நான் இந்த இடத்திலேயே இருந்திருக்கிறேன்; நடுவில் மூன்றுதரம் இரும்புப் பெட்டிக்குத்தான் போனேன்; வேறே எங்கேயும் போகவில்லை; அப்படிப் போன காலத்திலும் இங்கே மனிதரை வைத்துவிட்டுப் போயிருக்கிறேன். முதலில் லீலாவதி வந்தாள். அவள் தன்னுடைய விசனக் கடலில் ஆழ்ந்து குன்றிப்போய் உட்கார்ந்திருந்துவிட்டு வெகு சீக்கிரத்தில் போய்விட்டாள். அவள் ஒருக்கால் கொண்டு வந்து