பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பூர்ணசந்திரோதயம்-1 நீலலோசனி அம்மாளது தேக ஸ்திதியில் சொற்ப அநுகூலமும் காணப்பட வில்லை. அவளது தேகத்தின் ஒவ்வோர் அங்கமும் மீளாதபடி இறந்துபோக அவளது உயிர் மாத்திரம் நிற்பதுபோல ஆகிவிட்டது. அவ்வாறு ஆறுமாதகாலம் கழிந்தது; நீலலோசனி யம்மாளது பெட்டியில் பணமிருந்த வரையில், அந்தப் பெண்களுக்குப் பணவிஷயத்தைப் பற்றிய கவலையே தோன்றா மலிருந்தது. மூத்தவளான கமலம் துரும்பை யெடுத்துத் துரும் போடு போடாமல் மெலுக்காக இருக்கும் இயற்கை யுடையவளாதலால், வீட்டின் சகலமான பொறுப்பையும் அலுவல்களையும் ஷண்முக வடிவே ஏற்று நடத்திக்கொண்டு போக நேர்ந்தது. கடைசியாக ஒருநாள், ஷண்முகவடிவு தனது அத்தையின் பெட்டியைத் திறந்து, அதற்குள்ளிருந்த கடைசி ரூபாயை எடுத்து வேலைக்காரியிடத்தில் கொடுத்துக் கடைக்கு அனுப்பியபோதுதான் மறுநாளைக்கு வேண்டிய பணத்திற்கு என்ன செய்கிறது என்ற கவலையும் அச்சமும் அவளது மனதில் எழுந்து சஞ்சலப்படுத்தத் தொடங்கியது; அவள் உடனே தனது அக்காளண்டையில் போய்த் தனது கவலையை வெளியிட, அக்காள் சிறிதுநேரம் சிந்தனை செய்தபின், தனது அத்தையின் பெட்டிகளை நன்றாக ஆராய்ந்து அவற்றுக்குள்ளிருந்த தஸ்தாவேஜுகளை எல்லாம் படித்துப் பார்த்தால் அத்தைக்கு அதுவரையில் எந்த மூலமாக வருமானம் வந்து கொண்டிருந்த தென்பது தெரியுமென்று தங்கைக்கு யோசனை சொன்னாள். அவ்வாறே அத்தையின் பெட்டிகளிற் குள்ளிருந்த தஸ்தா வேஜுகள் யாவும் ஆராய்ந்து பார்க்கப்பட்டன. அவைகளில் பண விஷயமான தகவல் எதுவும் அகப்படவில்லை. மிகவும் இடுக்காக இருந்த அந்த நிலைமையில் அவர்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் உண்டாக்கத் தக்க எவ்வித ஆதாரமும் காணப்படவில்லை. பெண்கள் இருவரும் கையைப் பிசைந்துகொண்டு தவிக்கிறார்கள். அப்போது இளையவளுக்கு ஒரு நினைவு தோன்றியது. தங்களது அத்தை ஆறு மாத காலத்திற் கொருமுறை திருவாரூரிலிருந்த ஒரு செட்டியாரது பாங்கிக்கிப்