பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பூர்ணசந்திரோதயம்-1 வெளியில் நடக்க, அவரைத் தெய்வமாகவே மதித்து அவரது விஷயத்தில் எவ்விதச் சந்தேகமும் கொள்ளாமல் நம்பி இருந்த பெண்மணி கதவை மூடி உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டாள். அவ்வாறு தனியாக விடப்பட்ட அந்த யெளவன நங்கை தனக்கு எவ்வித இடரும் நேராது என்ற துணிபோடு இருந்தாள். ஆனாலும், அவளது பங்களாவிலிருந்த நீலலோசனியம்மாளது நினைவு அடிக்கடி உண்டாகி வருத்திக் கொண்டிருந்தது. அவளது வேலைக்காரியான முத்தம்மாள் பங்களாவிலேயே சாப்பாடு முதலியவைகளை யெல்லாம் செய்துகொண்டு இரவுபகல் அங்கேயே இருந்து வந்தாளானாலும், நீலலோசனி அம்மாளைக் கவனிப்பதில் அவள் ஷண்முகவடிவைப் போல அவ்வளவு திறமை வாய்ந்தவள் அல்ல. ஆதலால், நெடுநேரமாகத் தான் இல்லாதிருப்பதால் முத்தம்மாள் அசட்டையாக இருக்கிறாளோ என்ற கவலை ஒரு பக்கத்தில் தோன்றி ஷண்முகவடிவை வருத்திக் கொண்டிருக்க அன்றையதினம் மாலையில் தனக்கு மலைபோல வந்து நேர்ந்த விபத்து ஒரு நொடியில் விலகிப் போகும் படி கடவுள் செய்ய, அந்தப் பண்டாரத்தை அனுப்பியதைப்பற்றி நினைத்து நினைத்து மகிழ்ந்து கடவுளது அருளைக் குறித்து பக்திப் பெருக்கு எய்தி மன இளக்கம் அடைந்தவளாப், அங்கே இருந்த படங்களையும் விக்கிரகங்களையும் ஒவ்வொன்றாகக் கூர்ந்துநோக்கி, தனது மனதிற்குள்ளாகவே ஸ்வாமியை ஸ் தோத்திரம் செய்து கொண்டவளாப், பண்டாரத்தின் வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள். பெரிய பண்ணைப் பிள்ளையின் வீடு பக்கத்தில் இருக்கிறது என்றும், தாம் போய் ஒரு நொடியில் அவரை அழைத்து வருவதாகவும் பண்டாரம் சொல்லி விட்டுப் போனார். ஆதலால், அவர்கள் அதிசீக்கிரத்தில் வந்து விடுவார்கள் என்று அந்தப் பூங்கொடி எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள். நெடுங்காலமாக செலவிற்குப் பணம்