உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பூர்ணசந்திரோதயம்-1 செய்யுங்கள். நாம் இப்படிச் செய்தால் இந்தப் பெண் கடைசிவரையில் உங்கள் மேல் சந்தேகங்கொள்ளவே இடமில்லை. இதுதான் சரியான தந்திரமாகத் தோன்றுகிறது. பெண்ணோடு சேர்ந்து நீங்களும் கண்ணிர்விட்டு அழுதால், நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையென்று எல்லோரும் நம்புவார்கள்' என்று கூறினான். அதைக்கேட்ட பண்டாரம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவராய், 'சரி; நீ சொல்வதுதான் சரியான யோசனை; அப்படியே செய்து விடுவோம். ஆனால், இருட்டில், நான் பலவந்தம் செய்யும்போது அவள் பலமாகக் கூச்சலிட்டுக் கதறுவாள். அதைப்பற்றி சந்தேகமே இல்லை. ஆனால், வீடுகள் அரைக்கால் மைல் தூரத்துக்கு அப்பால் இருப்பதால், இவள் எவ்வளவு அதிகமாகக் கூச்சலிட்டாலும் அங்கே கேட்காது. ஆனால், இவள் கூச்சலிடுகிற சமயத்தில், ரஸ்தாவில் தற்செயலாக யாராவது மனிதர் போனால், அவருடைய காதில் அந்த ஒசைவிழும். அந்த மனிதர் சந்தேகப்பட்டு வந்து பார்த்தால், அதனால் துன்பம் உண்டாகுமோ என்னவோ?’ என்றார். அதைக் கேட்டு முன் பேசிய முரட்டு மனிதன், 'இவள் கத்தினால்கத்தட்டும். அதைப்பற்றிக் கொஞ்சமும் பயமில்லை. இந்த அகாலத்தில் இந்த ரஸ்தாவில் எவரும் வருகிற வழக்கமே இல்லை. தப்பித் தவறி வந்தாலும், யாராவது ஒருவர் இருவர் வரப்போகிறார்கள். நான் ரஸ்தாவில் என்னுடைய ஆளில் ஒருத்தனை நிறுத்தி வைக்கிறேன். யாராவது மனிதர் வரும் போது இவளுடைய கூச்சல் ரஸ்தாவில் எட்டினால் வழிப்போக்கர் அதைக் கேட்டு அதென்ன கூச்சல் என்று ரஸ்தாவில் நிற்கும் நம்முடைய மனிதரிடத்தில்தான் கேட்பார்கள். “பண்டாரத்தைய்யா ஒரு பெண்பிள்ளைக்குப் பிசாசு ஒட்டுகிறார். ஒருவரும் கிட்டே வரக்கூடாது' என்று என்னுடைய ஆள் பக்குவமாகச் சொல்லி அவர்களை அனுப்பி விடும்படி செய்கிறேன். அந்த வழிப்போக்கர் அதை நம்பாது மடத்தண்டை நெருங்கிவந்தால், நாங்கள் எல்லோரும் சேர்ந்து,