உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 293 மனம் பதறுகிறது. நீ எனக்காக ஓர் உதவி செய்.இப்போது முதல் நீ போய் இவளுடைய ஜாகைப் பக்கத்தில் எங்கேயாவது மறைவாக இருந்துகொண்டு, இவளுடைய நடவடிக்கைகளைக் கவனித்து இவளுக்குப் பக்கத்துணை யானவர்கள் யார் யார் என்பதையும், இவள் யாருக்காவது வைப்பாக இருக்கிறாளா என்பதையும், இன்னும் இவளைக் குறித்த எந்த விவரம் உனக்குத் தெரிந்தாலும் அதையும், நீ என்னிடம் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். நான் இன்னும் சில ஆள்களை அமர்த்தி இரண்டொரு காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. இவள் நயத்தில் வழிக்கு வருகிறவளாகத் தோன்றவில்லை. ஆகையால், நாம் நிரம் பவும் தந்திரமாகவும், எவருக்கும் தெரியாதபடியும் இவளை சூரக்கோட்டைக்குக் கொண்டு - போய், என்னுடைய வளவில் ரகசியமான இடத்தில் வைத்து இவளுடைய கொட்டத்தை அடக்கி இவளைக் கொண்டு வந்துவிட வேண்டும். பிறகு, இவள் எனக்கு வைப்பாட்டியாக இருந்தவள் என்ற விஷயம் இந்த ஊர் முழுவதும் பரவிக் போகும்படி நம்முடைய ஆள்கள் செய்துவிடவேண்டும். இந்த இரண்டு காரியங்களும் என்னுடையதுண்டுதலின் மேலே தான் நடந்தன என்பது எவருக்கும் தெரியக்கூடாது. அவ்வளவு தந்திரமாக நாம் காரியத்தை நடத்த வேண்டும். என்னுடைய ஆசையும் நிறைவேறி விடவேண்டும். அதற்குமேல் இவளை வேறே யாரும் மதிக்காதபடி இவளுடைய பெயரும் கெட்டுப்போகும்படி செய்யவேண்டும். இந்த விஷயத்தில் நீ எனக்கு உதவியாக இருந்து என்னுடைய எண்ணங்களை நிறைவேற்றி வைத்தால், நான் உனக்கு நல்ல வெகுமதி தருகிறேன். இப்போதே ஏதாவது பணம் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்' என்றார். உடனே பஞ்சண்ணாராவ் குனிந்து கூழைக்கும்பிடு போட்டுப் பல்லைக் காட்டி, "எஜமானுடைய பிரியப்படி நடந்துகொள்ள இந்த நாய்க்குட்டி எந்த நேரத்திலும் காத்திருக்கிறது. அதைப்பற்றி எஜமானுக்குக் கொஞ்சமும்