பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 299 கூறியவண்ணம் இரண்டு தாதிகள் முன்னேவர, அவர்களைத் தொடர்ந்து ஒரு வடிவம் வந்தது. மகாராஜாவின் பட்டமகிஷி களான பாய்ஸாகேப்புகளும், அவரது உறவினர்களும் கோஷா முறையை அனுஷ்டிக்கிறவர்கள். ஆகையால், அவர்கள் எங்கேயாகிலும் சென்றால், வேலைக்காரிகள் இரண்டு பெரிய துப் பட்டிகளைத் திரையாகப் பிடித்து மறைத்தபடியே அவர்களை வண்டியிலிருந்து வீட்டிற்குள்ளும், வீட்டிற் குள்ளிருந்து வண்டிக்கும் அழைத்துப் போவது வழக்கம். அதுபோல, மற்ற சாதாரணமான மகாராஷ்டிர ஸ்திரீகள் கூட வீட்டை விட்டு வெளியில் வருவதானால் துப் பட்டியால் தங்களை உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் மறைத்துக் கொண்டு வருவது வழக்கம். யாராவது புருஷர் தங்களுக்கு எதிரில் வந்தால், அவர்கள் தங்களது முகத்தைத் துப்பட்டியால் நன்றாக மூடிக்கொண்டு வேறே பக்கமாகத் திரும்பியபடி நடந்து போவது வழக்கம். சில ஸ்திரீகள் சீட்டித் துணியால் ஓர் அங்கி தைத்து அதைப் போட்டுத் தங்களை மறைத்துக் கொள்வர். அந்த அங்கி முகம் முதலிய சகலமான அங்கங்களையும் சுத்தமாக மறைத்துக்கொள்ளும். ஆனால், பார்ப்பதற்கு மாத்திரம் கண்களிற்கு எதிரில் இரண்டு சிறிய துளைகள் விடப் பட்டிருப்பது வழக்கம். அந்தத் துளைகளின் வழியாக அவர்கள் வெளியிலுள்ள பொருள்களையும் மனிதர்களையும் நன்றாகப் பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு அந்த ஸ்திரீகளது பிரகாசமான கண்களும் பாதங்களுமே தெரியுமன்றி மற்ற எந்த அங்கமும் தெரிவதில்லை. அதுபோலவே பூர்ணசந்திரோதயத்தைப் பார்ப்பதற்காக அரண்மனையிலிருந்து வந்த பெருமாட்டி ஓர் அங்கியால் தனது - உச்சி முதல் உள்ளங்கால் வரையில் மூடிக்கொண்டு தாதிகளுக்குப் பின்னால் வந்து சேர்ந்தாள். அந்த அங்கி ஜரிகைப் புட்டாக்கள் நிறைந்த பனாரீஸ் பட்டினால் தைக்கப்பட்டிருந்தது. அன்றி கண்களுக்காக விடப்பட்டிருந்த துளைகளைச் சுற்றிலும் அதன் அடிப்பக்கத்தின் கரைகளிலும்