உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 . பூர்ணசந்திரோதயம்-1 ராஜனுடைய இருதயகமலத்திலிருந்து, அவனுடைய பிரேமை யாகிய நிகரற்ற பெருஞ் செல்வத்தை ஓயாமல் அனுபவித்துக் கொண்டிருப்பது பதினாயிர மடங்கு சிரேஷ்டமானது என்று நான் எண்ணுகிறேன். நான் முக்கியமாகச் சொல்ல வந்ததென்ன வென்றால், அழகும் குணமும் நிறைந்த ஸ்திரீகள் எங்கே பிறந்தாலும், மதிப்பும் பூஜிதையும் சந்தோஷ வாழ்க்கையும் சகலமான செல்வங்களும், அவர்களுக்கு வந்து வாய்க்கலாம். ஒரு மகாராஜன் கூட அவளை வணங்கும்படியான பாக்கியம் கிடைக்கலாம். ஆனால், அந்த மகாராஜன் அவளை சாஸ்திரப்படி கலியாணம் செய்துகொள்ளக் கூடாமல் இருக்கலாம். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. கலியாணத்தில் என்ன இருக்கிறது? அது வெளிப்படையான ஒரு சடங்கேயன்றி அதனால், உண்மையான காதலும் மன ஒற்றுமையும் கட்டாயம் ஏற்படத் தான் வேண்டுமென்று சொல்லமுடியாது. ஒரு பெண்ணின் மேம்பாடுகளைக் கண்டு ஒரு புருஷன் அவளிடத்தில் காதல் கொண்டு பரஸ்பரம் மன ஒற்றுமை அடைந்து, சுகித்திருப்பது ஒரு பழம் தானாகவே கனிவது போன்றது. பிறர் பார்த்துக் கலியாணம் செய்து வைத்ததன் மேல் ஸ்திரீயும் புருஷனும் வாழ்ந்திருப்பது புகை போட்டு ஒரு காயைப் பலவந்தமாகக் கணிய வைப்பது போன்றது. அது பழுத்தாலும் பழுக்கலாம், வெம்பிப்போனா லும் போகலாம்; அப்படிப் பழுத்தாலும் தானாகக் கனிந்த பழத்தின் சுவை அதிலிருக்காது' என்றாள். பூர்ணசந்திரோதயம் மிகுந்த லஜ் ஜை அடைந்தாள் ஆனாலும், தனது இயற்கை மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கைவிடாதவளாய் இனிமையாகப் புன்னகை செய்து, “ஏதேது தாங்கள் பேசுவதைப் பார்த்தால், இனி உலகத்தில் கலியாணமே உதவாதென்றும், ஸ்திரீ புருஷர்கள் தங்கள் தங்கள் மனசுக்கு உகந்தவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதே சிலாக்கியம் என்றும் சொல்லுவீர்கள் போலிருக்கிறதே! ஆனால், தாங்கள் சொல்வதும் ஒருவிதத்தில் உண்மையாகத்தான் இருக்கிறது.