உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 பூர்ணசந்திரோதயம்-1 பெருமாட்டி, 'இல்லை. இல்லை. அவர் குடுகுடு கிழவரல்லவா. அவருக்கு இப்போது வயது எழுபதாகிறது. அவருடைய புத்தியும் மாறாட்டம் அடைந்திருக்கிறது. அவர் இந்த ராஜாங்க விஷயம் எதையுமே கவனிக்கிறதில்லை. அவருடைய பிள்ளையான இளவரசர் இருக்கிறாரே அவர்தான் இப்போது மகாராஜாவின் அதிகாரங்களை யெல்லாம் நடத்தி வருகிறார். அவர் நிரம்பவும் அழகும் யெளவனப் பருவமும் வாய்ந்தவர். மகா ஸ்ரசி; உல்லாஸ் புருஷர். அதுவும் வடிவழகும், நற்குணங்களும், புத்திசாலித்தனமும் கல்வியும் வாய்ந்த யெளவனப் பெண்கள் என்றால், அவர்களை அவர் தம்முடைய உயிராகவே பாவித்துக் கனகாபிஷேகம் செய்வார். உங்களைப் பற்றிய சகலமான விவரங்களும் அவருக்கு எட்டி இருக்கின்றன. ஆகையால், உங்களுடைய பிரியத்தையும் சிநேகத்தையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமென்று அவர் நிரம் பவும் ஆவலாக இருக்கிறார். ஆனால், உங்களுடைய மனப்போக்கு எப்படி இருக்குமோ என்ற சந்தேகத்தினால் அவர் பின்வாங்கிக் கொண்டிருக்கிறார். உங்களுடைய கருத்தும் அதற்கு ஒத்ததாக இருக்குமென்று இப்போது எனக்குத் தெரிவதால், நான் போய் உங்களுடைய சம்மதியை அவரிடம் தெரிவித்து, உங்களை நீங்கள் இருப்பதற்குத் தகுதியான அந்தஸ் தில் வைக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது. வேறொன்றுமில்லை' என்றாள். அதைக்கேட்ட பூர்ணசந்திரோதயம், 'ஓகோ அப்படியா! உண்மை இப்போதுதான் தெரிகிறது! வியாழக்கிழமையாகிய இன்றையதினம் அவருடைய முறையாயிற்றே. அவர் எப்படியும் இன்று நேரில் வந்து இப்படிப்பட்ட பிரஸ்தாபத்தைச் செய்வார் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அவர் வராமல் தங்களை அனுப்பி இருக்கிறார் போலிருக்கிறது. அப்படிப்பட்ட மேன்மை தங்கிய இளவரசரை நேரில் கண்டு பேச வேண்டும் என்றும், அவருடைய சொல்லை மீறி எப்படிப் பேசுகிறது என்றும்