உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 329 கேள்விப் பட்டதில்லை. ஆனாலும், ஒரே ஒரு விஷயம் மாத்திரம் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மகாராஜாவுடைய மனசுக்கு உகந்த அழகான பெண்களைக் கண்டுவிட்டால், அவர்களைத் தூக்கி வைத்துப் பேசி அபாரமாகப் புகழ்ந்து முகஸ்துதிகளைச் சரமாரியாக வாரி வீசி, அவர்கள் தலை யெடுக்கா விதம் அடித்து, ஒரே நொடியில் அவர்களைத் தம்முடைய வலையில் வீழ்த்தி விடுவதில் மகாராஜா நிரம்பவும் திறமை வாய்ந்தவர்களென்று நான் கேள்வி யுற்றிருக்கிறேன். அது நிஜமென்பது இப்போது நிதரிசனமாகத் தெரிந்துவிட்டது' என்றாள். இளவரசர் கரைகடந்த மகிழ்ச்சியடைந்து சந்தோஷமாக நகைத்து, 'நீ மற்ற ஸ்திரீகளையெல்லாம்விட உயர்ந்த மேதாவி என்பது நீ இப்போது சொன்ன விஷயத்தினாலேயே நன்றாகத் தெரிகிறது. என்னிடத்தில் எந்த அம்சம் முக்கியமாக இருக்கிறதோ, அதை நீ தெரிந்துகொண்டு மற்றவைகளைத் தெரிந்து கொள்ளாமல் விட்டிருக்கிறாய். மற்ற ஸ்திரீகள் இந்த ஒரு விஷயத்தை மாத்திரம் தெரிந்து கொள்ளாமல் மற்ற விஷயங்களையெல்லாம் தெரிந்து கொள்ளுகிறார்கள். இதுதான் மேதைக்கும் பேதைக்கும் உள்ள வித்தியாசம். ஆனால், ஒரு மனிதரிடத்தில் நிரம்பவும் யோக்கியதை இருக்குமானால், அவர்களை மற்றவர் ஸ்தோத்திரம் செய்வது குற்றமாகாது. அண்ட பிண்ட சராசரங்களை எல்லாம் படைத்தவனும், சர்வ வல்லமை உடையவனும், சர்வக்ஞனுமான கடவுளை விட அதிகமான ஸ்தோத்திரப்பிரியன் வேறொருவனும் இருக்க மாட்டான். எப்பேர்ப்பட்ட பாபிகளும் துஷ்டர்களும் கூட ஈசுவரனைப் பார்த்து அப்பனே ஐயனே என்று ஸ்தோத்திரம் செய்து செய்து அவனுடைய பெயர்களைச் சொல்லி அவனுடைய செயல்களைப் புகழ்ந்து சகஸ்ரநாமம் சொல்லித் துதித்தால், அவனுடைய மனம் உடனே இளகிக் போகிறது. அவன் எல்லா வரங்களையும் உடனே கொடுத்து விடுகிறான். முகஸ்துதி செய்வது ஈசுவரனுக்கே உகந்ததாக