உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 17 மார்க்கமில்லை என்பதை உணர்ந்த பெண்மணி அந்த பாங்கி எவ்விடத்திலிருக்கிறதென்பதை விசாரித்து அறிந்து கொண்ட வளாய் வண்டியில் உட்கார்ந்துகொண்டு கிழக்கு ராஜவீதியி லிருந்த அந்த பாங்கிக்கு வண்டியை ஒட்டச்செய்தாள். அரை நாழிகை நேரத்தில் வண்டி அந்த பாங்கியின் வாசலில் போய் நின்றது. உடனேகமலம் கீழே இறங்கி பாங்கிக்குள்போய் அதன் முதலாளியான செட்டியாரைப் பார்த்து விஷயத்தைச் சொல்ல, அவர், 'யாரோ சேவகன் பணம் கொண்டுவந்து கொடுக்கிறான்; வாங்கிக்கொண்டு போகிறான். சோமசுந்தரம் பிள்ளை என்பவரை நாங்கள் பார்த்ததில்லை. அவர் சேவகன் மூலமாக எங்களுக்குக் கொடுத்திருந்த விலாசம் இதுதான். இதை நான் உங்களுக்கு எழுதியனுப்பினேன். மற்ற விவரம் எதுவும் எங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டார். அதைக் கேட்ட கமலத்தின் நாடி வீழ்ந்துவிட்டது. சொற் பமாக அவளது மனத்திலிருந்த நம்பிக்கையும் போய்விட்டதாகையால், அந்த இள நங்கை மிகுந்த ஏக்கமும், ஏமாற்றமும், கலக்கமும் அடைந்தவளாய் அந்த பாங்கியை விட்டு வெளியில் வந்துவிட்டாள். சோமசுந்தரம் பிள்ளை என்பவரைப் பற்றிய விஷயமெல்லாம் ஏதோ காரணத்தைப் பற்றி மிகவும் பூடகமாகவும் மர்மமாகவும் நடத்தப்படுகிறது என்பதை அவள் உணர்ந்துகொண்டாள். ஆனால், அந்த மர்மம் இன்னதென்ன அறிந்துகொள்ளக் கூடாததாக இருந்தது. ஆகவே, தான் தஞ்சையை விட்டு உடனே திரும்பி ஊருக்குப் போவதே இனி தான் செய்யக்கூடிய காரியம் என அவள் எண்ணினாள். தான் போய் அந்த மகா துக்ககரமான விஷயத்தைத் தனது தங்கைக்கு எப்படி தெரிவிப்பதென்றும், தானும் தங்கையும் எப்படிப் பொருள் தேடித் தங்களது அத்தையைக் காப்பாற்றுவதென்றும் கமலம் பலவாறு எண்ணமிட்டுக் கலங்கலானாள். தாங்கள் இனிமேல் தங்களது வீட்டை விற்றுத் தின்னவும், அதன்பிறகு யாசகத்திற்குப் புறப்படவும் தங்களுக்குத் தலைவிதி இருந்ததாவென்று பூ.ச.1-3