பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பூர்ணசந்திரோதயம்-1 கரத்தை அண்டாவிற்குள் விட்டு, அவரைத் தடவிக் கொடுக்கவாகிலும், அவகாசம் இல்லாமல் போய்விட்டது. நூலேணி இன்ன காரணத்திற்காக அண்டாவிற்குள் போடப்பட்ட தென்பதைத் தனது கள்ளப்புருஷர் எளிதில் யூகித்துக் கொள்வாரென்ற நினைவைக் கொண்டு நிரம்பவும் திருப்தியடைந்தவளாய் அந்த மடந்தை தனது நடலங்களை அவ்வளவோடு நிறுத்திக்கொண்டு, தனது கணவரண்டை வந்து சேர்ந்து, தான் தேடி எடுத்துவந்த மோதிரத்தை அவரிடத்தில் காட்டி மிகுந்த சந்தோஷமும் முகமலர்ச்சியும் கொண்டவளாய் அதைத் தனது விரலில் அணிந்துகொண்டு புறப்படலானாள். உடனே கணவரும் மனைவியும் மேன்மாடத்தை விட்டுக் கீழே இறங்கினார்கள். அந்த மடந்தை மேன்மாடத்தின் கதவை மூடி வெளியில் தாளிட்டுக் கொண்டு கீழே இறங்க, இருவரும் வெளியில் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்த சவாரி வண்டியில் ஏறி உட்கார்ந்துகொள்ள, அதுவும் சாமான் வண்டியும் புறப்பட்டு விசையாகப் போகத் தலைப்பட்டன. 3-வது அதிகாரம் பெண்மான் வேட்டை தஞ்சைபுரியை மகாராஷ்டிர அரசர்கள் தங்களது ராஜதானிப் பட்டணமாகச் செய்து அந்த நகரில் இருந்து வந்த காலத்தில், அவர்களுக்குக் கீழ்ப்பட்ட பெருத்த பெருத்த ஜெமீந்தார்களும், மிட்டாதார்களும், பாளையக்காரர்களும், ஜாகீர்தார்களும், இனாம்தார்களும், மிராசுதார்களும் அந்த ஊரில் பெருத்த பெருத்த மாளிகைகளை இயற்றிக்கொண்டு அவ்விடத்தில் இருந்து, அரசரோடும் அவரது அரண்மனையிலிருந்த அவரைச் சேர்ந்த உறவினர்களோடும் நட்பாக இருந்து, வருஷத்தில் முந்நூற்றறுபத்தைந்து நாட்களிலும் பண்டிகை கொண்டாடிக் குதூகலமாகப் பொழுதை போக்கிக் கொண்டிருப்பது வழக்கம். மேலே குறிக்கப்பட்டவர்களுள்